துப்பாக்கிச்சூடு நடத்திய 6ம் வகுப்பு பள்ளி மாணவி – போலீசார் தீவிர விசாரணை!!

0
An empty classroom.

ஆறாம் வகுப்பு சிறுமி வியாழக்கிழமை தனது இடாஹோ பள்ளியில் துப்பாக்கிச் சூடு நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு சகமானவர்கள் மற்றும் ஊழியர்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரியவந்துள்ளது.

துப்பாக்கிசூடு, மாணவர்கள் காயம்:

அமெரிக்காவின் இடாஹோவின் உள்ள ரிக்பி நடுநிலைப்பள்ளியை சேர்ந்த 6ம் வகுப்பு மாணவி துப்பாக்கிச்சூடு நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வியாழக்கிழமை சிறுமி தனது பையிலிருந்த கைத்துப்பாக்கியை எடுத்து திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதனால் சகமானவர்கள் இருவரும் பள்ளி ஊழியரும் காயமடைந்தனர். துப்பாக்கிச்சூடு நடத்திய சிறுமியின் பெயரும் வயதும் சரியாக வெளிப்படவில்லை.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

துப்பாக்கிச்சூடு நடத்திய சிறுமி பள்ளிக்கு உள்ளேயும் வெளியேயும் பல சுற்றுகள் சுட்டார் என கருதப்படுகிறது. சிறுமி திடீரென நடத்திய துப்பாக்கி சூட்டிற்கான காரணங்கள் ஏதும் தெரியவில்லை எனவும் விசாரணை நடந்து கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

நிலுவையிலுள்ள 2 மாத இலவச ரேஷன், உயர்கல்வி மாணவர்களுக்கு உதவித்தொகை – புதிய முதல்வர் அதிரடி!!

இச்சம்பவம் நடந்து சில நேரங்களிலேயே மாணவர்கள் அனைவரும் பெற்றோர்களுடன் வீட்டிற்கு அனுப்பப்பட்டனர். சிறுமிக்கு எதிரான குற்றச்சாட்டில் மூன்று கொலை முயற்சிகள் அடங்கும் எனவும் தெரியவந்துள்ளது. துப்பாக்கிசூட்டில் காயமானவர்கள் உயிருக்கு பாதிப்பு இல்லை எனவும் அனால் காயம் கடுமையானதாக உள்ளது எனவும் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here