பிளஸ் 2 மாணவர்களுக்கு மதிப்பெண்கள் இப்படித்தான் வழங்கப்படும்… பள்ளி கல்வித்துறை அமைச்சர் தகவல்!!!

0

தமிழகத்தில் தற்போது பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில், மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறை பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கொரோனா வைரஸ் பெருந்தொற்றை கருத்திற்கொண்டு மத்திய அரசு சமீபத்தில் சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகளை ரத்து செய்ததை தொடர்ந்து இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைப் போன்று தமிழ்நாட்டிலும் பன்னிரெண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வு இந்த ஆண்டு ரத்து செய்யப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது.

தற்போது மாணவர்களுக்கு எப்படி மதிப்பெண்களை வழங்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள், ஆசிரியர்கள் மத்தியில் எழுந்திருக்கிறது.  இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது தொடர்பாக ஒரு உயர்மட்ட குழு அமைக்கப்பட்டிருப்பதாகவும், அவர்களின் அறிவுறுத்துதலின்படி பிளஸ் 2 மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்குவது குறித்த முடிவுகள் விரைவில் வெளியிடப்படும்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டுதகளும் விரைவில் வெளியிடப்படும் என்றும், நீட் போன்ற நுழைவு தேர்வுகளுக்களுக்கு எக்காரணம் கொண்டும் தமிழகத்தில் நடத்த அனுமதி அளிக்கப்படாது என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here