ரத்து செய்யப்பட்ட பொதுத்தேர்வுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் முறை… வெளிவந்த தகவல்!!!

0

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பாடவாரியாக மதிப்பெண் வழங்காமல் தேர்ச்சி என்று மட்டும் குறிப்பிட்டு மதிப்பெண் சான்றிதழ் வழங்க பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளதாக தற்போது தகவல்கள்  வெளிவந்த வண்ணம் உள்ளன.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கொரோனா நோய் பரவல் காரணமாக பல்வேறு தேர்வுகள் அந்தந்த வாரியத்தால் ரத்து செய்யப்பட்டது. இதில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளும் அடக்கம். தற்போது கூட சிபிஎஸ்இ பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாகப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். அதைத் தொடர்ந்து உத்தரகண்ட், குஜராத்  உள்ளிட்ட பல மாநிலங்களிலும் +2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. மேலும், தமிழ்நாட்டிலும் +2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

இந்நிலையில், ஏற்கனவே ரத்து செய்யப்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு மதிப்பெண் வழங்குவது குறித்த பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை மேற்கொண்டது. 5 பாடங்களுக்கான மதிப்பெண்கள் தனித்தனியாக வழங்கப்படாமல் தேர்ச்சி என்று மட்டுமே மதிப்பெண் பட்டியலில் குறிப்பிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவ்வாறு பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியலை வடிவமைத்து அரசின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்களிருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது.

Facebook   =>Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here