இந்தியாவில் இருந்து வெளியேறும் சிட்டி பேங்க் – வாடிக்கையாளர்களின் நிலை??

0

சர்வதேச அளவிலான சந்தையில் சில முக்கியமான நகரங்களில் இருந்து வெளியேற தற்போது சிட்டி பேங்க் முடிவு செய்துள்ளது. இந்நிலையில் அந்த வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களின் நிலை என்ன என்று அனைவரும் குழம்பி வருகின்றனர்.

சிட்டி பேங்க்:

இந்தியா உட்பட 13 நாடுகளில் இருந்து ரீடைல் பிரிவில் இருந்து வெளியேற அமெரிக்காவை சேர்ந்த சிட்டி பேங்க் தற்போது முடிவெடுத்துள்ளது. அதன்படி இந்தியா, சீனா, ஆஸ்திரேலியா, ரஷ்யா, போலந்து, தைவான், தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், மலேசியா, வியட்நாம், இந்தோனேசியா மற்றும் கொரியா ஆகிய நாடுகளில் இருந்து வெளியேற சிட்டி வங்கி முடிவு செய்துள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த வங்கிக்கு சர்வதேச அளவில் முக்கிய சந்தையாக அமெரிக்கா, சிங்கப்பூர், ஐக்கிய அரபு எமிரேகம் மற்றும் லண்டன் ஆகியவை உள்ளது. எனவே தற்போது தனது முக்கிய சந்தையில் மட்டுமே கவனம் செலுத்த இந்த வங்கி முடிவு செய்துள்ளது. இது குறித்து பேசிய சிட்டி பேங்கின் தலைமை செயல் அதிகாரி கூறுகையில், வெளியேற இருக்கும் சந்தையில் முக்கியமான போட்டியாளராக சிட்டி வங்கியால் வளர்ச்சி அடைய முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பூசியின் தாக்கமா? நகைச்சுவை நடிகர் விவேக்கிற்கு மாரடைப்பு!தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!!

தற்போது இந்தியாவில் இருந்து இந்த வங்கி வெளியேறவுள்ளதால் வாடிக்கையாளர்கள் மற்றும் வங்கி பணியாளர்களுக்கு பாதிப்பு உள்ளதா என்று தொடர்ந்து அனைவரும் குழம்பி வருகின்றனர். தற்போது இது குறித்து விளக்கமளித்த சிட்டி பேங்க், வங்கியில் தற்போதைய செயல்பாடு தொடரும். அதேபோல் பணியாளர்களும் தொடர்ந்து வங்கியில் செயல்படுவர்.

வங்கியை வாங்குவதற்கு மாற்று நிறுவனத்தை தேடி வருகிறோம் என்றும் தெரிவித்துள்ளது. இதனால் இந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் மற்றும் பணியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்தியாவில் மொத்தம் 35 சிட்டி வங்கி கிளைகள் உள்ளது. அதில் 4000 பணியாளர்கள், 12 லட்ச வங்கி கணக்கு வாடிக்கையாளர்கள் மற்றும் 22 லட்ச கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்கள் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here