தொடர்ந்து ஹிந்தி நடிகர்களை குறிவைக்கும் கொரோனா – வரிசையில் இணைந்த அர்ஜுன் கபூர்!!

0

வலிமை பட தயாரிப்பாளர் மகனும், பாலிவுட் ஹீரோவுமான அர்ஜுன் கபூருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தனிமையில் இருப்பதாக செய்தி வந்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அர்ஜுன் கபூர்:

இந்தி திரைப்பட நடிகர் மற்றும் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூர் மகன் ஆன அர்ஜுன் கபூர், 2012ம் ஆண்டு Ishaqzaade என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். மேலும் தற்போது இந்தியில் வளர்ந்து வரும் நடிகராக வலம் வந்து கொண்டு இருக்கிறார். தற்போது ஹிந்தி நடிகர்களை கொரோனா தொற்று பதம் பார்த்து வருகிறது. முதலில் பிரபல இந்தி நடிகைகளான கரீனா கபூர், அம்ரிதா அரோரா ஆகியோருக்கு சமீபத்தில் கொரோனா நோய் ஏற்பட்டு சிகிச்சைக்கு பிறகு நன்கு குணமடைந்தனர்.

இந்த வரிசையில் தற்போது அர்ஜுன் கபூரும் பாதிக்கப்பட்டுள்ளார். மேலும் அவரும் அவரது சகோதரி அன்ஷுலா கபூருக்கும் உடல்நல குறைவு ஏற்பட்ட நிலையில் பரிசோதனை செய்து பார்க்கும் போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இந்த நிலையில் அவர்களின் தந்தை மற்றும் வலிமை பட தயாரிப்பாளருமான போனி கபூருக்கும் உடல் நல குறைவு இருந்த நிலையில் பரிசோதனை செய்து பார்த்த போது தொற்று இல்லை என்று தகவல் வெளியானது. இந்த நிலையில் அர்ஜுன் கபூர் தனிமையில் மும்பையில் உள்ள ஒரு ஹோட்டலில் இருப்பதாகவும், மற்றவர்கள் வீட்டில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here