2023-2026 ஆண்டிற்கான தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல்.., நடைபெறும் தேதி வெளியீடு!!

0
2023-2026 ஆண்டிற்கான தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல்.., நடைபெறும் தேதி வெளியீடு!!
2023-2026 ஆண்டிற்கான தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல்.., நடைபெறும் தேதி வெளியீடு!!

திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் நடைபெறும் தேதி குறித்து சோசியல் மீடியாவில் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

திரைப்பட தயாரிப்பாளர் சங்கம்:

சினிமாவின் முக்கிய அங்கமாக இருந்து வருபவர்கள் தயாரிப்பாளர்கள் தான். மேலும் இவர்களுக்கு என்று தனியாக சங்கம் இருக்கிறது. சங்கத்தின் உறுப்பினர்களை தேர்தல் மூலம் செலக்ட் செய்கிறார்கள். மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கான தேர்தல் நடைபெறுவது வழக்கம். தற்போது முரளி ராமசாமி தலைமையில் நிர்வாகிகள் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் 2023-2026 தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இதுதொடர்பாக சங்கத்தின் சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது, கடந்த ஜனவரி மாதம் 25ம் தேதி நடந்த கூட்டத்தில் 2023-2026 ஆண்டிற்கான நிர்வாக குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக வரும் 26.03.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று தேர்தல் நடத்தலாம் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும் 23.02.2023 காலை 11 மணி முதல் 26.02.2023 மாலை 5 மணிக்குள் வேட்பு மனு வழங்கப்படும் நிலையில் தேர்தலில் கலந்து கொள்ள விரும்பும் போட்டியாளர்கள் வருகிற 2.3.2023 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாரையும் முந்த விடாமல் முன்னுக்கு நிக்கும் பாக்கியலட்சுமி சீரியல்.,வெளியான விஜய் டிவி TRB ரேட்டிங் லிஸ்ட்!!

இதை தொடர்ந்து விண்ணப்பங்களை திரும்ப பெறுவதற்கு 5.03.2023 கடைசி நாள் என்றும் அன்று மாலை 6 மணி அளவில் இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி 6.03.2023 நடக்க இருக்கும் தேர்தல் காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை நடைபெறும். மேலும் வாக்கு எண்ணிக்கை மாலை 5 மணிக்கு மேல் நடைபெறும் என்று அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here