நேருக்கு நேர் மோதிக் கொள்ள தயாரான கீர்த்தி சுரேஷ் மற்றும் சசிகுமார் – மிகுந்த எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!

0

நடிகர் சசிகுமாரின் இரண்டு படங்கள் வெளியாகும் அதே நாளில் நடிகை கீர்த்தி சுரேஷின் குட்லக் சகி திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் கிடைத்துள்ளது.

ஒரே நாளில் மூன்று:

தமிழ் திரை உலகத்தில் தனது எளிமையான நடிப்பால் பல விருதுகளை வாங்கியுள்ளவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.  இவர் நடித்த நடிகையர் திலகம் படம் தமிழ் சினிமாவில் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.  இது போக இவர் தற்போது ரஜினியுடன் நடித்த அண்ணாத்த படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது.  இந்த நிலையில்,  தமிழ், தெலுங்கு, மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் எடுக்கப்பட்ட குட்லக் சகி திரைப்படம் நாகேஷ் குக்குனூர் இயக்கத்தில் உருவாகி உள்ளது.

இந்த படம் வருகிற நவம்பர் 26ம் தேதி திரைக்கு வர உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் கிடைத்துள்ளது.  இந்த படம் வெளியாகவுள்ள அதே நாளில் சசிகுமாரின் கொம்பு வச்ச சிங்கம்டா, ராஜவம்சம் உள்ளிட்ட படங்கள் திரைக்கு வரவுள்ளது. இதையடுத்து ஒரே நாளில் மூன்று படம் வெளியாக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ்அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here