நடிகை ரைசா வில்சனையும் விடாத கொரோனா – வெளியான செய்தியால் சோகத்தில் ரசிகர்கள்!!

0

கொரோனா தொற்றினால் பல நடிகர் நடிகைகளும் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது நடிகை ரைசாவும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த செய்தியை ரைசா தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

நடிகை ரைசா:

தமிழகத்தில் தற்போது கொரோனா படு வேகமாக பரவி கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் பல ஆயிரம் மக்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மறுபுறம் திரைப்பட படப்பிடிப்புகளும் தொடர்ந்து நடந்த வண்ணமே உள்ளன. இதனால் தற்போது வரை பல நடிகர் நடிகைகளும் தொடர்ச்சியாக கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது பியார் பிரேமா காதல் பட நாயகியான ரைசா வில்சனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

ரைசா கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட செய்தியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இரண்டு கொரோனா தடுப்பூசிகளையும் போட்ட பின்பும் இரண்டாவது முறையாக கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளேன். இன்னும் எத்தனை நாட்கள் இந்த வைரஸ் தொற்று நம்மை ஆட்டி படைக்க இருக்கிறதோ. அனைவரும் பாதுகாப்பாக இருங்கள், கண்டிப்பாக முக கவசம் அணியுங்கள் என ரசிகர்களுக்கு ரைசா அறிவுறுத்தியுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here