தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் எக்கசக்க படங்களில் வில்லனாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வந்தவர் தான் கலாபவன். இவர் 2019 ஆம் ஆண்டு தனது 45 வயதில் திடீரென உயிரிழந்தார். இவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர் போலீசில் புகார் கொடுத்திருந்தனர். இதையொட்டி இந்த வழக்கை விசாரித்த போலீசார் தற்போது 35 பக்கங்களை உள்ளடக்கிய பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். அதில் தான் திடுக்கிடும் சில தகவல்கள் வெளியாகியுள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
அதாவது மது பழக்கத்திற்கு அடிமையான இவர் ஒரு நாளைக்கு 12 பாட்டில் பீர் அருந்தி வந்துள்ளார். இதனால் அவரது கல்லீரல் பாதிக்கப்பட்டு ரத்த வாந்தி எடுத்துள்ளார். அதன் பிறகும் கட்டுப்பாடு இல்லாமல் பீர் அருந்தி உடல் நிலை மோசமாகி உயிரிழந்துள்ளார். அதிலும் இவர் இறந்த அன்று மட்டும் 12 பாட்டில் பீர் அருந்தியுள்ளார் என அவருடைய நண்பர்களிடம் இருந்து போலீசார் வாக்குமூலம் சேகரித்துள்ளனர்.