கிறிஸ்துமஸ்க்கு 2 நாட்கள் உள்ளூர் விடுமுறை – குமரி மக்களுக்கு நற்செய்தி!!

0

கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கு 2 நாள் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். வருடந்தோறும் டிசம்பர் 25ம் தேதி அன்று கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதற்காக தமிழகத்திலும் டிசம்பர் 25 அன்று அரசு விடுமுறை அறிவிக்கும். ஆனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்துவ மக்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளதால் அங்கு பண்டிகையை முன்னிட்டு கூடுதலாக ஒரு நாள் விடுமுறை விடப்படும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த ஆண்டும் டிசம்பர் 24 ம் தேதியன்று உள்ளூர் விடுமுறை என அந்த மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் அறிவித்து உள்ளார். இதனால் குமரி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், நிறுவங்கள் அனைத்தும் டிசம்பர் 24 அன்று விடுமுறை. இதனால் குமரி மாவட்ட மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருந்தாலும் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் விருப்பமுள்ளவர்கள் மட்டும் பள்ளிக்கு வருகின்றனர். கல்லூரிகளில் இறுதியாண்டு மாணவர்கள், முதுநிலை இரண்டாம் ஆண்டு மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் மட்டுமே கல்லூரிகளுக்கு வருகின்றனர். உள்ளூர் விடுமுறை அறிவிப்பின் காரணமாக இவர்கள் அனைவருக்கும் பள்ளி, கல்லூரிகள் 2 நாட்கள் விடுமுறை நாள்.

கிறிஸ்துமஸ் தினத்தன்று கிறிஸ்தவ மக்கள் அனைவரும் தேவாலயங்களில் ஒன்று கூடுவர். இதனால் கொரோனா நோய்த்தொத்தொற்று அதிகமாக பரவ வாய்ப்புள்ளது. இதை தவிர்ப்பதற்காக மக்கள் அனைவரும் அரசு அறிவித்துள்ள வழிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு ரத்து!!

டிசம்பர் 24 அன்று விடப்படும் உள்ளூர் விடுமுறையை சரி செய்யும் விதமாக 2021 பிப்ரவரி மாதம் இரண்டாவது சனிக்கிழமை (13.02.2021) அன்று வேலை நாள் இருக்கும். அன்றைய தினம் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் அனைத்தும் வழக்கம் போல் செயல்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்தது உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here