வண்ண விளக்குகளால் மின்னும் தேவாலயங்கள் – நாடு முழுவதும் ‘கிறிஸ்துமஸ்’ கோலாகல கொண்டாட்டம்!!

0

இயேசு அவதரித்த தினமான கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. கொரோனா கால தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு இன்றைய பண்டிகை தினம் விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

கிறிஸ்துமஸ் திருநாள்:

கிறிஸ்துமஸ் தினத்தை கிருத்தவர்கள் மிக விமர்சையாக ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றனர். இந்த ஆண்டு கொரோனா பரவல் அச்சம் காரணமாக பல வித கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பலரும் இந்த ஆண்டு கிருஸ்துமஸ் விழாவினை வீட்டில் இருந்தே கொண்டாடி வருகின்றனர். ஆனால், இந்தியாவில் பல தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் தின விழா விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகின்றது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேற்கு வங்க மாநிலத்தில் பார்க் ஸ்ட்ரீட் பகுதியில் அனைத்து மதத்தினை சேர்ந்தவர்களும் தேவாலயத்திற்கு முன் ஒன்று கூடி வண்ண விளக்குகளால் அலங்கரித்து கொண்டினர். அதே போல் இங்கு சமூக இடைவெளி கடைபிடித்து, முகக்கவசம் அணிந்து கொரோனா கால நடவடிக்கைகளை பின்பற்றி கொண்டாடினர். கோவா மாநிலத்தில் பிரபலமான தேவாலயத்தில் வண்ண விளக்குகள் அலங்கரித்து, வழக்கமான உற்சாகத்துடன் இன்றைய தினம் கொண்டாடப்பட்டது. சிறப்பு பிராத்தனை, திருப்பலி போன்றவையும் நிறைவாக செய்யப்பட்டன.

கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் ‘வாட்ஸ்அப்’ ஸ்டிக்கர்ஸ் – எப்படி டவுன்லோட் செய்வது??

கேரள மாநிலத்தின் கொச்சியின் செயின்ட் ஜார்ஜ் தேவாலயத்தில் கொரோனா பரவல் அச்சம் காரணமாக குறைவான நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். சிலர் மட்டுமே பங்கேற்றாலும், பிராத்தனை வெகு சிறப்பாக நடைபெற்றது. இதே போல் தான் மகாராஷ்டிரா, பெங்களூரு, டெல்லி, தமிழகத்தின் பல பகுதிகளில் எப்போதும் போலவே இயேசு பிரான் அவதரித்த திருநாளான கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here