முதல் முறையாக நடிகர் விக்ரம் வெளியிட்ட பதிவு – அசத்தல் என்ட்ரியால் களைகட்டும் ட்விட்டர்!

0
ச்ச.. விக்ரமுக்கு போய் இப்படி ஒரு நிலைமையா - கோப்ரா படக்குழு எடுத்த மிக மோசமான முடிவு!

நடிகர் சியான் விக்ரம் முதல் முறையாக ட்விட்டர் பக்கத்தில் இணைந்துள்ளார். மேலும் இவர் தன் ரசிகர்களுக்காக ஒரு வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.

நடிகர் விக்ரம்:

தமிழ் சினிமாத்துறையில் சிறு சிறு வேடங்களில் நடித்து தற்போது முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் நடிகர் விக்ரம். மேலும் அவர் நடிப்பு துறைக்கு வருவதற்கு முன்பாக பல படங்களில் டப்பிங் பேசியுள்ளார். இதை தொடர்ந்து இயக்குனர் பாலா இயக்கிய சேது படத்தில் நடித்து ரசிகர்களை தன் வசம் இழுத்துக் கொண்டார். இவரின் நடிப்பில் வெளியான ஐ, அந்நியன், பிதாமகன் போன்ற படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தன.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

தற்போது இவரின் கோப்ரா மற்றும் பொன்னியின் செல்வன் படங்கள் வெளியாவதற்கு தயார் நிலையில் உள்ளது. மேலும் பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரமின் புதிய படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். தற்போது நடிகர் விக்ரம் ட்விட்டரில் சியான் விக்ரம் புதிய கணக்கை தொடங்கி ஒரு வீடியோவும் பதிவிட்டு உள்ளார். மேலும் இவர் ட்விட்டர் கணக்கை தொடங்கிய ஒரு நிமிடத்தில் கிட்டத்தட்ட 80 ஆயிரம் பேருக்கு மேல் ரசிகர்கள் இவரை பின் தொடர்ந்து உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here