தீக்கிரையாகிய பள்ளி வளாகம்.. வன்முறையில் இறங்கிய மக்கள் – 144 தடை உத்தரவு அமல்!

0
தீக்கிரையாகிய பள்ளி வளாகம்.. வன்முறையில் இறங்கிய மக்கள் - 144 தடை உத்தரவு அமல்!
தீக்கிரையாகிய பள்ளி வளாகம்.. வன்முறையில் இறங்கிய மக்கள் - 144 தடை உத்தரவு அமல்!

சின்னசேலத்தில் உள்ள தனியார் பள்ளி மாணவி மரணம் குறித்து மக்கள் வன்முறையில் இறங்கியதால் பல் பொருட்சேதங்கள் ஏற்பட்டுள்ளது.இதனால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சின்ன சேலத்தில் 144 தடை:

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே சேலம் உள்ள தனியார் பள்ளியில் ஸ்ரீமதி என்ற மாணவி பள்ளி விடுதியில் தங்கி 12ம் வகுப்பு படித்த நிலையில் கடந்த 13ம் தேதி மாணவி ஸ்ரீமதி அதிகாலையில் பள்ளி விடுதியின் 3வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்ததாக பள்ளி நிர்வாகம் தெரிவித்தது.இதன் அடிப்படையில் காவல்துறை மாணவி உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில் மாணவி ஸ்ரீமதி மரணத்தில் மர்மம் உள்ளது என்று மாணவியின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தற்போது பள்ளி வளாகம் முன்பு போராட்டம் தீவிரம் அடைந்து மக்கள் வன்முறையில் மக்கள் ஈடுபட தொடங்கினர். இதனால் போலீஸ்காரர்களுக்கும் போராட்டக்காரர்களுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு போராட்டம் கலவரமாக மாறியது.இதில் போலீஸ்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.இதனை தொடர்ந்து கள்ளக்குறிச்சி தாலுகா மற்றும் சின்னசேலம் தாலுகாவில் ஆகிய இடங்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து தற்போது பள்ளி தாளாளர் ரவிக்குமார், பள்ளி செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மக்கள் மீண்டும் வன்முறையில் இறங்காமல் இருப்பதற்காக கள்ளக்குறிச்சி மற்றும் சின்ன சேலம் போன்ற சில பகுதிகளுக்கு 144 தடை போடப்பட்டுள்ளது என்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here