ஆதாரமில்லாத பாலியல் குற்றசாட்டால் சின்மயி, லீனா கருத்துக்கு இடைக்காலத் தடை – நீதிமன்றம் உத்தரவு!!

0

பாடகி சின்மயி, லீனா மணிமேகலை இருவரும் இயக்குனர் சுசி கணேசன் மீது பாலியல் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளனர். உண்மைக்கு புறம்பான செய்தியை இருவரும் பரப்பி வருவதால் இவர்களின் கருத்துக்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

நீதிமன்றம் உத்தரவு

பாலியல் தொந்தரவுக்கு எதிராக குரல் கொடுக்கும் வகையில் 2018 ஆம் ஆண்டு மீ டூ என்ற ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டது. அதில் இயக்குனர் சுசி கணேசனுக்கு எதிராக பாடகி சின்மயி மற்றும் கவிஞர் லீனா மணிமேகலை இருவரும் பாலியல் குற்றச்சாட்டை வைத்துள்ளனர். தன்னை குற்றம் சாட்டுவதாக இருவருக்கும் எதிராக சுசி கணேசன் அவதூறு வழக்கை போட்டுள்ளார். உண்மைக்கு புறம்பான செய்தியை இருவரும் சமூக வலை பக்கங்களில் பகிர்ந்து வருவதால் இருவரின் மீதும் வழக்கு தொடர்ந்துள்ளார்.

உரிய ஆதாரம் இல்லாமல் என்னை பற்றி அவதூறாக பேசியதால் ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் இழப்பீடு தர உத்தரவிட வேண்டும் என்றும், இப்படி செய்தியை கண்டபடி பரப்புவதற்கு நிரந்தரமாக தடை விதிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார். இவரது கோரிக்கையை நீதிமன்றம் ஏற்று பாடகி சின்மயி மற்றும் கவிஞர் லீனா மணிமேகலையின் கருத்திற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவை பிறப்பித்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here