சைனீஸ் ஸ்டைல் “சிக்கன் மஞ்சூரியன்” – வீக் எண்ட் ஸ்பெஷல் !!!

0

சைனீஸ் ரெஸிபி பிடிச்சவங்க நெறைய பேர் அது ஹோட்டல்ல மட்டும் தான் சாப்பிட முடியும்னு நினைப்பாங்க. ஆனா அப்படிலாம் இல்லங்க. சைனீஸ் ரெசிபியும் நம்ம சமையலை போல ஈஸி தான். இந்த வீக் எண்ட் உங்க வீட்ல சைனீஸ் ஸ்டைல் “சிக்கன் மஞ்சுரியன்” செஞ்சு அசத்துங்க. ஸ்பைசியான சிக்கன் மஞ்சூரியன் எப்படி செய்யலாம்னு பாக்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:

சிக்கன்  –  500gm
சோயாசாஸ் – 1  டீ ஸ்பூன்
இஞ்சி,பூண்டு பேஸ்ட் – 2 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
மிளகுத்தூள் – 2 டீ ஸ்பூன்
காஷ்மீரி மிளகாய் தூள்- 1 டேபிள் ஸ்பூன்
முட்டை வெள்ளை கரு – 1
அரிசி மாவு – 1 டேபிள் ஸ்பூன்
சோளமாவு – 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய்  – தேவையான  அளவு
வினிகர் – 1 டீ ஸ்பூன்
சர்க்கரை – 1 டேபிள் ஸ்பூன்
சில்லி சாஸ் – 2 டீ ஸ்பூன்
தக்காளி சாஸ் – 1 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் – 1
வெங்காயத்தாள் – சிறிதளவு
குடைமிளகாய்-1
தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை:

சிக்கன்  துண்டுகளை எலும்பில்லாத சதுர துண்டுகளாக வாங்கி கொள்ள வேண்டும். சிக்கன் துண்டுகளை நன்கு கழுவி வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு பௌலில் சிக்கன் துண்டுகள், சோயா சாஸ், உப்பு, இஞ்சி,பூண்டு பேஸ்ட், காஷ்மீரி மிளகாய் தூள், மிளகுத்தூள், சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இதில் முட்டையின் வெள்ளை கரு, அரிசி மாவு, சோளமாவு சேர்த்து நன்கு கலந்து 30 நிமிடங்கள் ஊற விட வேண்டும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஊற வைத்த சிக்கன்  துண்டுகளை ஒரு பானில் எண்ணெய் ஊற்றி அதில் பொன் நிறம் ஆகும் வரை பொறித்து எடுக்கவும்.  முட்டையின் வெள்ளை கருவை சேர்த்து இருப்பதால் சிக்கன் நன்கு மொறு மொறுப்பாக  இருக்கும்.

பொறித்து எடுத்த சிக்கன் துண்டுகளை தனியாக வைத்து கொள்ள வேண்டும். இப்பொழுது ஒரு பௌலில் சோளமாவு எடுத்து அதில் 1/4 கப் அளவு தண்ணீர் சேர்த்து கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். மற்றொரு பௌலில் வினிகர், சில்லி சாஸ், தக்காளி சாஸ், சோயா சாஸ், சர்க்கரை இவற்றை தனியே வைத்துக் கொள்ள வேண்டும்.

இப்பொழுது ஒரு பானில், சிறிது எண்ணெய்  சேர்த்து அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்க வேண்டும். அதன் பச்சை வாடை போன பின்பு  வெங்காயம், வெங்காயத்தாள், குடைமிளகாய்  உப்பு சேர்த்து நன்கு வதக்க வேண்டும். காய்கள் வதங்கிய பின்பு அதில் தனியே எடுத்து வைத்திருக்கும் சாஸ்களை ஊற்றி கலந்து விட வேண்டும்.

டாக்டராக ரீஎன்ட்ரி கொடுக்கும் துர்கா – அப்போ வெண்பாவிற்கு ஆப்பு நிச்சயம்! குஷியில் ‘பாரதி கண்ணம்மா’ ரசிகர்கள்!!

சாஸ் கொதிக்க ஆரம்பிக்கும் போது அதில் தனியே வைத்திருக்கும் சோளமாவு கரைசலை சேர்க்க வேண்டும். பிறகு 1 கப் அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும். கொதிக்க ஆரம்பிக்கும் போது பொறித்து வைத்திருக்கும் சிக்கன் துண்டுகளை சேர்த்து நன்கு கலந்து விட வேண்டும்.

இப்பொழுது ஒரு 5 நிமிடங்கள் மூடி வைத்து சிக்கன்  துண்டுகளில்  மசாலாவின் சுவை ஏறும் வரை வைத்திருக்க வேண்டும். தண்ணீர் வற்றியதும் அடுப்பை அனைத்து விட வேண்டும். கடைசியாக சிறிது வெங்காயத்தாள் சேர்த்து இறக்கி விடலாம். இதோ மிகவும் சுவையான ஸ்பைசியான “சிக்கன் மஞ்சூரியன்” ரெடி!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here