சீனாவில் பூஜ்ய கொரோனா கொள்கையில் தளர்வு., அதிரடி உத்தரவை பிறப்பித்த அரசு!!

0
சீனாவில் பூஜ்ய கொரோனா கொள்கையில் தளர்வு.,அதிரடி உத்தரவை பிறப்பித்த அரசு!!
சீனாவில் பூஜ்ய கொரோனா கொள்கையில் தளர்வு.,அதிரடி உத்தரவை பிறப்பித்த அரசு!!

சீனா அரசு பயணிகளுக்கான தனிமைப்படுத்தப்பட்ட நேரத்தைக் குறைத்து அறிக்கை வெளியிட்டுள்ளது. இது குறித்து முழு விவரத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

தனிமைப்படுத்தப்பட்ட நேரம்:

உலகின் முதன் முதலாக கொரோனா வைரஸ் சீனாவின் வுகான் நகரில் தான் கண்டறியப்பட்டது. இதையடுத்து பல கட்டுப்பாடுகளை விதித்த சீன அரசு கொரோனா பரவலை கட்டுப்படுத்தியது. இருப்பினும் கடந்த சில வாரங்களாக சீனாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. இதையடுத்து அரசு ‘பூஜ்ய கொரோனா கொள்கை’ என்ற அடிப்படையில் கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்தியது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அதாவது சீனாவில் கொரோனா பாதிப்பு இல்லை என்ற நிலையை அடைவதற்காக அந்நாட்டு அரசு தீவிரமான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. இந்நிலையில் சீனா ‘பூஜ்ய கொரோனா கொள்கையை எளிதாக்கும் வகையில், நாட்டிற்குள் வரும் பயணிகளுக்கான தனிமைப்படுத்தப்பட்ட நேரத்தைக் குறைத்துள்ளது. இது மட்டுமல்லாமல் சர்வதேச விமானங்களில் தடைகளை நீக்குவதாகவும் அறிவித்துள்ளது.

அதாவது அறிவிப்பின்படி, நாட்டிற்கு வரும் விமான பயணிகளுக்கான கொரோனா தனிமைப்படுத்தல் காலம் 10 நாட்களில் இருந்து 8 நாட்களாக குறைக்கப்பட்டு உள்ளது. இந்த வகையில் பயணிகள் 5 நாட்கள் மாநில தனிமைப்படுத்தல் மையத்திலும், 3 நாட்கள் வீட்டிலும் தனிமையில் இருக்க வேண்டும். இதையடுத்து 48 மணி நேரத்திற்கு முன் எடுத்த “கொரோனா நெகட்டிவ்” சான்றிதலை சீனாவுக்கு வரும் விமானப் பயணிகள் காட்ட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here