சீனாவின் கொரோனா வைரஸ் தடுப்பூசி சோதனைக்கு பிரேசில் அனுமதி..!

0

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸிற்கு சீனா மருந்தை கண்டு பிடித்துள்ளது. அதற்கு சினோவக் ” என பெயரையும் வைத்துள்ளது.

சீனாவின் ‘சினோவக்’ கொரோனா தடுப்பூசி..!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸிற்கு சீனா மருந்தை கண்டு பிடித்துள்ளது. அதற்கு சினோவக் ” என பெயரையும் வைத்துள்ளது. சீனா கண்டுபிடித்துள்ள “சினோவக்” மருந்துக்கு பிரேசிலின் சுகாதார கட்டுப்பாடு மையம் அன்விசா ( Anvisa) வெள்ளிக்கிழமை அன்று ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த அறிவிப்பு சாவோ பாலோ மாநிலத்தில் உள்ள புட்டான்டன் என்ற நிறுவனத்தின் மூலம் ஜூன் 11 அன்று முதலில் அறிவிக்கப்பட்டது. இந்த “சினோவாக் ” மருந்தின் மூலமாக சோதனைகள் மட்டும் இல்லாமல் தடுப்பூசியை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதற்கான தொழில்நுட்பத்தின் ஒப்புதலைப் பெற்றுள்ளது.

ஜூன் 29 அன்று “சினோவக்” தடுப்பூசி மருந்தை செலுத்த 9,000 தன்னார்வலர்கள் பதிவு செய்துள்ளனர் என சாவ் பாலோ மாநில ஆளுநர் ஜோவா டோரியா தெரிவித்துள்ளார். பிரேசிலில் உள்ள ஆறு மாநிலங்களில் சாவ் பாலோ, ரியோ டி ஜெனிரோ, மினாஸ் ஜெராய்ஸ், பிரேசிலியா, ரியோ கிராண்டே டோ சுல் மற்றும் பரணா, டோரியா உள்ள 12 ஆராய்ச்சி மையங்களில் சோதனைகள் நடத்தப்படுவதாக அறிவித்து உள்ளனர்.

பிரேசிலுக்கு அனுமதி..!

COVID-19 உறுதிப்படுத்தப்பட்ட 1.5 மில்லியன் நோயாளிகளை பிரேசில் தாண்டிய பிறகே அன்விசாவின் ஒப்புதல் பிரேசிலுக்கு கிடைக்கும் COVID-19 இன் உறுதிப்படுத்தப்பட்ட 1.5 மில்லியன் நோயாளிகளை பிரேசில் கடந்துள்ளது. பிரேசிலின் சுகாதார அமைப்பின் தரவுகளின்படி அமெரிக்காவிற்குப் பிறகு பிரேசில் இரண்டாவது மோசமான நிலையை எட்டியுள்ளது என கூறுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் பிரேசிலில் இறப்பு எண்ணிக்கை 1,290- ஆக அதிகரித்து உள்ளதாகவும் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 63,174 – ஆக உயர்ந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here