சீனாவில் தலைவிரித்தாடும் கொரோனா – தொற்றை கட்டுப்படுத்த மீண்டும் ஊரடங்கு!!

0

உலகில் முதன் முதலாக 2019 ஆம் ஆண்டு சீனாவில் கொரோனா கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அந்நாட்டில் தொற்று குறைந்து பிற நாடுகளில் அதிகரிக்க தொடங்கியது. பிற நாடுகளில் கூடிய கொரோனா தொற்று உருமாற்றம் அடைந்து அதன் வீரியத்தை நாளுக்கு நாள் பெருகிகொண்டுள்ளது.

ஏற்கனவே காரோண வைரஸ் ஆல்பா, பீட்டா என உருமாறிய வைரஸ் டெல்டா ரக கொரோனாவாக உருமாற்றம் அடைந்தது. பிற கொரோனவை காட்டிலும் இது மிகுந்த வீரியம் வாய்ந்தது என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்தது. இந்தியாவில் இரண்டாம் அலை தீவிரம் அடைய காரணம் இந்த டெல்டா வைரஸ் தான் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

இந்த டெல்டா வைரஸ் தற்போது உலக நாடுகளுக்கு பரவி பல நாடுகளை பாடாய் படுத்தி வருகிறது. தற்போது சீனாவிலும் இந்த வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. தற்போது வரை சீனாவின் 20 நகரங்களில் டெல்டா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

எனவே சீன அரசு நோய் தடுப்பு நடவடிக்கையாக மூன்று நாட்களுக்கு உகான் மாகாணத்தின் உள்ள ஜூஜென் நகரில் தீவிர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here