நிலவில் கொடி நாட்டிய சீனாவின் ‘ஆர்பிட்டர் ரிட்டனர்’ – பூமிக்கு திரும்புகிறது!!

0

நிலவில் மாதிரிகளை எடுத்துக்கொண்டு சீன விண்கலம் ‘ஆர்பிட்டர் ரிட்டனர்’ பூமிக்கு திரும்பும் பயணத்தை வெற்றிகரமாக தொடங்கியது.  தொடங்கி உள்ளது. இது விண்வெளி துறையில் புதிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.

நிலவில் சீனா:

நிலவிலிருந்து கல், மண் உள்ளிட்ட 2 கிலோ மாதிரிகளை சேகரித்து வந்து அதனை பரிசோதிக்கும் முயற்சியில் அமெரிக்கா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் வெற்றிகண்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக சீனா அதற்கான முயற்சியில் இறங்கியுள்ளது. இதையடுத்து கடந்த மாதம் 24-ஆம் தேதி ‘சாங் இ5’ என்ற விண்கலத்தை சீன அரசு ஏவியது. இந்த விண்கலத்தில் ‘ஆர்பிட்டர், லாண்டர், அசெண்டர், ரிட்டனர்’ போன்ற கருவிகள் உள்ளன.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த விண்கலம் கடந்த 1-ம் தேதி நிலவில் தரையிறக்கப்பட்டது. பின்னர் சீனாவின் கொடியை நிலவில் நாட்டி சாதனை படைத்தது. அதில் இருந்து, ‘அசென்டர்’ என்ற கருவி, வெற்றிகரமாக பிரிந்து சென்று, நிலவில் இருந்து மாதிரிகளை சேகரித்து அதனை ‘ஆர்பிட்டர் ரிட்டனர்’ என்ற கருவியில் சேர்த்துவிட்டு கடந்த வியாழக்கிழமை பூமிக்கு திரும்ப விண்கலம் புறப்பட்டுவிட்டது.

நிலவின் தரையில் இருந்து விண்கலம் புறப்படும் வீடியோ காட்சிகளை சீன தொலைக்காட்சி ஒளிபரப்பியது. இதன் மூலம் நிலவில் நாங்கள் சாதனை படைத்துள்ளோம் என்று சீன விண்வெளி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

மோட்டோ ஜி 5ஜி ஸ்மார்ட்போன் இன்று முதல் விற்பனை!!

நிலவின் மாதிரிகளை வைத்து, நிலவு எப்படி தோன்றியது, எப்படி உருவானது, தரையில் எரிமலைக்கான அம்சங்கள் என்னென்ன, ரசாயன கலவைகள் உட்பட பல தகவல்களை கண்டுபிடிக்க முடியும் என்று சீன விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here