டேஸ்டியான “சில்லி மோமோஸ்” ரெசிபி – ஒரு தடவ ட்ரை பண்ணி தான் பாருங்களேன்!!

0

குழந்தைகளுக்கு சத்தான காய்கறிகளை அவர்களுக்கு பிடித்த வகையில் செய்து தர வேண்டும். அந்த வகையில் இன்று “சில்லி மோமோஸ்” ரெசிபியை எப்படி செய்வது என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்..!!

தேவையான பொருட்கள்

மாவு செய்ய
  • மைதா மாவு – 1/2 கப்
  • உப்பு – தேவையான அளவு
  • எண்ணெய் – 1 டீஸ்பூன்
  • தண்ணீர் – தேவையான அளவு
காய்கறி கலவை செய்ய
  • வெங்காயம் – 1/4 கப்
  • காரட் – 1/4 கப்
  • கேப்ஸிகம் – 1/4 கப்
  • முட்டைகோஸ் – 1/4 கப்
  • இஞ்சி – 2 டீஸ்பூன்
  • பூண்டு – 2 டீஸ்பூன்
  • உப்பு – 2 டீஸ்பூன்
  • மிளகு தூள் – 2 டீஸ்பூன்
  • பீன்ஸ் – 1/4 கப்
சில்லி மோமோஸ் செய்ய
  • பூண்டு – 1 டீஸ்பூன்
  • வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
  • எண்ணெய் – தேவையான அளவு
  • சோயா சாஸ் – 1 டீஸ்பூன்
  • தக்காளி கெட்சப் – 1 டீஸ்பூன்
  • கேப்ஸிகம் – 1
  • உப்பு – 1 டீஸ்பூன்
  • மிளகு தூள் – 1 டீஸ்பூன்

செய்முறை

முதலில், மாவினை எடுத்து அதில் சிறிதளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும். பின், அதனை சிறு சிறு உருண்டைகளாக பிடித்து கொண்டு, அதனை வைத்து கொள்ள வேண்டும். பின், ஒரு பாத்திரத்தில் காய்கறி கலவைக்காக எடுத்து வைத்துள்ள அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து கிண்டி வைத்து கொள்ள வேண்டும்.

காதலனுடன் நெருக்கமாக இருக்கும் ‘பிக் பாஸ்’ ஓவியா – ட்ரெண்டாகும் புகைப்படம்!!

பின், எடுத்து வைத்துள்ள மாவினை சப்பாத்தி போல தேய்த்து அதில் காய்கறி கலவையினை கொஞ்சமாக வைத்து கொள்ள வேண்டும். மோமோஸ் வடிவில் மாவினை மடித்து கொள்ள வேண்டும். பின், அதனை இட்லி சட்டியில் வேக வைக்க வேண்டும். பின், ஒரு சட்டியினை காய வைத்து அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி அதில் எடுத்து வைத்துள்ள மோமோசை வதக்க வேண்டும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மோமோஸ் பொன்னிறமாக வந்ததும் அதனை தனியாக எடுத்து வைத்து கொள்ளுங்கள். பின், அதே சட்டியில் மீண்டும் சிறிதளவு எண்ணெய் ஊற்றி அதில் பூண்டு, வெங்காயம், கேப்ஸிகம், சில்லி சாஸ், தக்காளி கெட்சப், உப்பு, மிளகு தூள் ஆகியவற்றை சேர்த்து கொள்ள வேண்டும். கடைசியாக, எடுத்து வைத்துள்ள மோமோசை போட்டு நன்றாக கிண்டி விட வேண்டும். அவ்ளோ தான்!!

யம்மியான “சில்லி மோமோஸ்” ரெடி!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here