இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநில அரசும், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பல்வேறு நலத்திட்டங்களை வழங்க திட்டமிட்டு வருகின்றனர். இந்த வகையில், புதுச்சேரி மாநில முதல்வர் ரங்கசாமி ‘பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்’ என்ற பெயரில் புதிய திட்டம் ஒன்றை தொடங்கி வைத்துள்ளார்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இந்த திட்டத்தின் படி, பெண் குழந்தைகள் பிறந்தால் அவர்களது பெயரில் வங்கி அல்லது அஞ்சல் நிலையத்தில் ரூ.50 ஆயிரம் முதலீடு செய்யப்படும். இந்த பணமானது 21 ஆண்டுகளுக்கு பிறகு அந்த பெண் குழந்தைக்கு வழங்கப்படும். இந்த திட்டத்தில் பயனடையும் குழந்தையின் பெற்றோர் குறைந்தபட்சம் 5 ஆண்டுகளாவது புதுச்சேரியில் வசித்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த மார்ச் 17 ஆம் தேதிக்கு (17.3.2023) பிறகு பிறந்த பெண் குழந்தைகளும் இந்த திட்டத்தில் பயன் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி 22 பெண் குழந்தைகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கி தொடங்கி வைத்துள்ளார்.