தாய்க்கு தெரிந்தே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் – போக்சோ சட்டத்தில் கைது!

0
தாய்க்கு தெரிந்தே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் - போக்சோ சட்டத்தில் கைது!
தாய்க்கு தெரிந்தே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் - போக்சோ சட்டத்தில் கைது!

சென்னையை சேர்ந்த ஐந்து குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

போக்சோவில் கைது:

சென்னையில் உள்ள டிபி சத்திரம் ஆர்.வி நகர் 1வது தெரு பகுதியில் மாரியம்மன் கூல் பார் என்ற பெயரில் பெட்டி கடை நடத்தி வருபவர் பெருமாள். இவரது கடையில் குட்கா பொருட்கள் விற்பனை நடப்பதாக அந்த ஏரியா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீசார் கடையை சோதனை செய்த போது கடையில் 30 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்து பெருமாளை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். மேலும், அவரது செல்போனை பறித்து நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளன.

தாய்க்கு தெரிந்தே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் - போக்சோ சட்டத்தில் கைது!
தாய்க்கு தெரிந்தே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் – போக்சோ சட்டத்தில் கைது!

சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமியிடம்,பெருமாள் தவறாக நடந்துள்ளது தெரியவந்தது. மேலும், இதற்கு காரணம் அந்த சிறுமியின் தாயுடன் ஏற்கனவே அவர் தொடர்பில் இருந்து வந்துள்ளார். மேலும் சிறுமியின் சித்தியான 28 வயது பெண்ணுடனும் அவர் தொடர்பில் இருந்துள்ளார். இதையடுத்து போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் அவரது தாய்க்கு தெரிந்தே இந்த பாலியல் கொடுமைகள் நடந்துள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதோடு இல்லாமல்,

தாய்க்கு தெரிந்தே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் - போக்சோ சட்டத்தில் கைது!
தாய்க்கு தெரிந்தே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் – போக்சோ சட்டத்தில் கைது!

சிறுமியின் வீட்டிற்கு வரும் சிறுமியின் தோழிகளான 11 வயது மற்றும் 4 வயது சிறுமிகளையும் துன்புறுத்தல் செய்து வந்துள்ளார். கிட்ட தட்ட அந்த பகுதியில் உள்ள 4 வயது சிறுமி முதல் 17 வயது சிறுமி வரை 5 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. இதற்காக, 500 முதல் 2,000 ரூபாய் வரை கொடுத்து அவர்களை இந்த துன்பத்திற்கு ஆளாக்கி இருப்பதும் தெரியவந்தது. மேலும், அதை வீடியோவாகவும் பதிவு செய்துள்ளதை குற்றவாளி ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து, அந்த நபரும், அவருக்கு உடந்தையாக இருந்த இரு பெண்களும் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here