மதுரை காப்பகத்தில் அரங்கேறிய குழந்தைகள் விற்பனை…மேலும் 14 குழந்தைகள் மாயம்…!தலைமறைவான காப்பாக உரிமையாளருக்கு போலீஸ் வலைவீச்சு!!!

0

மதுரையில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் கொரோனாவால் இறந்ததாக கூறி  2 குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக 4 பெண்கள் உட்பட 7 பேரை காவல்துறையினர் கைது செய்து உள்ளனர். மேலும் தலைமறைவான அந்த குழந்தைகள் காப்பாக உரிமையாளரை தேடி போலீஸ் தனிப்படை மதுரைக்கு விரைந்து உள்ளது.

மதுரையில் உள்ள இதயம் டிரஸ்ட் காப்பகத்தில் ஐஸ்வர்யா என்ற ஆதரவற்ற பெண்ணின் ஒரு வயது ஆண் குழந்தை கொரோனவால் இறந்தது என்று போலி ஆவணங்கள் தயாரித்து அந்த காப்பக உரிமையாளர் சிவக்குமார் மற்றும் நிர்வாகிகள் கொடுத்துள்ளனர். இதை அறிந்த அசாருதீன் என்பவர் மதுரை ஆட்சியரிடம் புகார் தெரிவித்ததை அடுத்து, மதுரை கலெக்டர் உத்தரவின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இதில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகின.

அதாவது, ஐஸ்வர்யாவின் ஒரு வயது ஆண் குழந்தை மாணிக்கம் மதுரை இஸ்மாயில்புரத்தை சேர்ந்து கண்ணன் – பவானி தம்பதினருக்கு ரூ.5 லட்சத்திற்கு விற்றதாகவும், அதே போல், கர்நாடகாவை சேர்ந்த ஸ்ரீதேவியின் இரண்டு வயது பெண் குழந்தை தீபாவை கல்மேடு சேர்ந்த அனீஸ் ராணி – சாதிக் தம்பதினருக்கு விற்றதாகவும் தெரியவந்து உள்ளது. இதையடுத்து அந்த இரு குழந்தைகளும் மீட்கப்பட்டு உள்ளனர். இந்த குழந்தைகளை சட்டப்படி தத்து எடுக்காத காரணத்தினால் அந்த இரு தம்பதிகள் உட்பட காப்பக ஊழியர் கலைவாணி மற்றும் புரோக்கராக இருந்த செல்வி உள்ளிட்ட 7 பேரை போலீஸ் கைது செய்து உள்ளனர்.

மேலும் இந்த காப்பகத்தை 12 ஆண்டுகளாக பதிவு செய்யாமல் நடத்தி வந்தது தெரிய வந்துள்ளது. அந்த வருகை பதிவேட்டில் மொத்தம் 16 குழந்தைகளின் பெயர்கள் இருந்த நிலையில் மீட்கப்பட்ட 2 குழந்தைகளை தவிர மற்ற 14 குழந்தைகள் பற்றி தெரியாத நிலையில் அந்த குழந்தைகளும் விற்கப்பட்டு இருக்கலாம்  என்ற நோக்கில் போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது. இதுபோன்ற பல குளறுபடிகள் அந்த காப்பகத்தில் நடந்துள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதை தொடர்ந்து அந்த காப்பகத்தில் இருந்தவர்களை வெவ்வேறு இடங்களுக்கு மாற்றி காப்பகத்திற்கு சீல் வைத்து உள்ளனர்.

இது குறித்து மதுரை கலெக்டர் கூறியதாவது, மாவட்டத்தின் அணைத்து காப்பகத்திலும் ஆய்வு நடத்தப்படும் என்றும், மாயமான குழந்தைகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்து உள்ளார். மேலும் இதில் தொடர்புடைய அனைவர் மீதும் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்து உள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here