கொரோனா நோய்த்தொற்று எதிரொலி – மாநில முதல்வரின் சகோதரர் மரணம்!!

0
கொரோனா நோய்த்தொற்று எதிரொலி - மாநில முதல்வரின் சகோதரர் மரணம்!!
கொரோனா நோய்த்தொற்று எதிரொலி - மாநில முதல்வரின் சகோதரர் மரணம்!!

நாட்டில் கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக பல பிரபலங்கள் உயிரிழந்து வரும் நிலையில் தற்போது மேற்கு வங்க முதல்வரின் இளைய சகோதரனான அஷிம் பானர்ஜி உயிரிழந்துள்ளார்.

மேற்கு வங்கம்:

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

மேற்கு வங்கத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை கைப்பற்றி அசத்தியுள்ளார் மம்தா பானர்ஜி. இதன் காரணமாக அவருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருந்தது. கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் கொரோனா பேரிடர் காலம் என்பதால் அதனை சரிசெய்வதற்கான அனைத்து கட்ட நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார் முதல்வர் மம்தா.

மாநில முதல்வரின் சகோதரர் மரணம்!!
மாநில முதல்வரின் சகோதரர் மரணம்!!

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் இந்தியா முழுவதும் கடந்த சில மாதங்களாகவே கொரோனா நோய்த்தொற்று பாதிப்புக்கு உள்ளாகி அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், சினிமா துறையினர் போன்றவர்கள் உயிரிழந்து வருகின்றனர். தற்போது அந்த வகையில் சில தினங்களுக்கு முன்பு மேற்கு வங்க முதல்வரின் இளைய சகோதரனான அஷிம் பானர்ஜிக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது.இதன் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அஷிம் பானர்ஜி இன்று உயிரிழந்துள்ளார். தற்போது இவரது மறைவிற்கு தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here