தீரன் சின்னமலை படைத்தளபதிக்கு மணிமண்டபம் – தமிழக அரசு அறிவிப்பு!!

0

ஈரோடு பகுதியில் தீரன் சின்னமலை படைத்தளபதி பொல்லானுக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பொல்லான்:

இந்திய சுதந்திர போராட்டத்தில் கொங்கு மண்டலத்திற்கு பெரிய பங்கு உள்ளது. அந்த போராட்டத்தின் தொடக்க காலத்தில் ஓடாநிலையை தலைநகரமாக கொண்டு தீரன் சின்னமலை ஆங்கிலேயர் படைகளை எதிர்த்து போராடினார். அந்த போராட்டத்தில் தீரன் சின்னமலை வெற்றிபெற்றார்.. அதற்கு முக்கிய காரணம் அவரின் படைத்தளபதி பொல்லான் தான். இதனால் ஈரோடு பகுதியில் பொல்லானுக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

சித்ராவின் ‘கால்ஸ்’ உடன் வெளியான 2 திரைப்படங்கள் – ரசிகர்கள் உற்சாகம்!!

இதனை தொடர்ந்து கடந்த 15ம் தேதி அன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நாமக்கல்லில் நடந்த அருந்ததியர் ஆதரவு மாநாட்டில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, தீரன் சின்னமலையின் படைத்தளபதிக்கு மணிமண்டபம் கட்ட படும் என்றும் அந்த மண்டபத்தில் அவரது உருவச்சிலையும் இடம்பெற்றிருக்கும் என்றும் அறிவித்தார். தற்போது அதற்காக ஈரோடு மாவட்டத்தில் உரிய பகுதியை தேர்வு செய்துள்ளனர். மேலும் மண்டபம் அமைக்கப்படும் என்று அரசனையும் வெளியிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here