ஸ்பைசியான “சிக்கன் டிக்கா” ரெசிபி – ட்ரை பண்ணி தான் பாருங்களேன்!!

0

அசைவ பிரியர்களுக்கு எப்போதுமே சிக்கன் என்றால் அலாதி பிரியம் தான். அந்த வகையில் சிலர் ஹோட்டலில் தான் சிக்கன் ஐட்டங்கள் நன்றாக இருக்கும் என்று நினைப்பர். ஆனால், அப்படி இல்லை வீட்டில் கூட சுவையாக சிக்கன் ரெசிபிக்களை செய்யலாம். இன்று “சிக்கன் டிக்கா” எப்படி செய்வது என்று இந்த பதிவில் காணலாம்..!!

தேவையான பொருட்கள் 

சிக்கனை ஊறவைக்க 
  • சிக்கன் – 1/2 கிலோ (எலும்பில்லாததாக)
  • எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்
  • இஞ்சி பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
  • மிளகு – 1 1/2 டீஸ்பூன்
  • சீரகம் தூள் – 1 1/2 டீஸ்பூன்
  • கரம் மசாலா – 1 1/2 டீஸ்பூன்
  • பச்சை மிளகாய் – 3 எண்
  • தயிர் – 1/2 கப்
  • புதிய கிரீம் – 1/4 கப் (விருப்பம் இருந்தால்)
  • கொத்தமல்லி & புதினா – பொடியாக நறுக்கியது
  • சோள மாவு – 2 டீஸ்பூன்
  • எண்ணெய் – 2 டீஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு
டிக்கா செய்ய 
  • வெண்ணெய்
  • புதினா & கொத்தமல்லி சட்னி
  • எலுமிச்சை சாறு

செய்முறை

முதலில், ஒரு பாத்திரத்தில் சிக்கன், தயிர், உப்பு, எலுமிச்சை சாறு, இஞ்சி பூண்டு விழுது, மிளகு, சீரகம் தூள், கரம் மசாலா, பச்சை மிளகாய், தயிர், புதிய கிரீம் ஆகியவற்றை சேர்க்க வேண்டும். கடைசியாக எண்ணெய் சேர்த்து அதனை நன்றாக கிளற வேண்டும். இந்த கலவையுடன் சோள மாவினையும் சேர்க்க வேண்டும். நன்றாக சிக்கனில் மசாலா படும் வரை பிசைய வேண்டும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த கலவையினை அப்படியே ஒரு மணி நேரம் வைத்திருக்க வேண்டும். இது நன்றாக ஊறியதும் தனி தனியாக எடுத்து வைத்து அதனை ஸ்டிக் பயன்படுத்தி சிக்கனை எடுத்து சொருக வேண்டும். இதனை தனியாக எடுத்து வைத்து கொள்ள வேண்டும்.

ஒரு வருஷம் அதுக்குள்ள ஓடி போச்சு – லாக்டவுன் நினைவுகள்!!

இதனை அலுமினியம் பாயிலில் வைத்து ஓவனில் வைக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் சிக்கனை எடுத்து அதில் வெண்ணையினை தடவி ஓவனில் வைக்க வேண்டும். பொன்னிறமாக வந்ததும் அதனை எடுத்து கொத்தமல்லி சட்னியுடன் பரிமாறலாம். அவ்ளோ தான்!!

                                      சூடான “சிக்கன் டிக்கா” தயார்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here