காரசாரமான “சிக்கன் சிந்தாமணி” – ட்ரை பண்ணி வீக்எண்ட என்ஜாய் பண்ணுங்க!!

0

இன்று வீக்எண்டு என்பதால் வீட்டில் என்ன சமைக்கலாம் என்று குடும்ப தலைவிகள் யோசித்து கொண்டு இருப்பார்கள். இன்று சற்று வித்தியாசமான “சிக்கன் சிந்தாமணி” ரெசிபி பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்..!!

தேவையான பொருட்கள்

  • சிக்கன் – 1/2 கிலோ
  • வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)
  • மிளகு தூள் – 2 டீஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு
  • காய்ந்த மிளகாய் – 6
  • எண்ணெய் – தேவையான அளவு
  • இஞ்சி பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
  • சீரகம் – 1 டீஸ்பூன்
  • எலுமிச்சை பழ சாறு – 1 டீஸ்பூன்

செய்முறை

முதலில், சிக்கனை நன்றாக கழுவி எடுத்து வைத்து கொள்ள வேண்டும். பின், ஒரு சட்டியினை காய வைத்து விட்டு அதில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் அதில் சீரகம் சேர்க்க வேண்டும். பின், கருவேப்பிலை, வெங்காயம் சேர்க்க வேண்டும். இந்த கலவை நன்றாக வதங்கியதும் அதில் காய்ந்த மிளகாய் போட்டு வதக்க வேண்டும். பின், அதில் எடுத்து வைத்திருந்த சிக்கனை போட வேண்டும்.

‘எவ்ளோ கோடி ரூபா கொடுத்தாலும் இத மட்டும் செய்யமாட்டேன்’ – அடம்பிடிக்கும் தனுஷ் பட நடிகை!!

பின், சிக்கன் வேக வேண்டும் என்பதற்காக அதில் சிறிது தண்ணீர் தெளித்து அதனை கிண்ட வேண்டும். ஒரு 5 நிமிடங்களுக்கு பிறகு அதில் உப்பு மற்றும் மிளகு தூளை சேர்க்க வேண்டும். நன்றாக கிளறியதும், சிக்கன் தயாராகி விடும்.

இதில் கடைசியாக கருவேப்பில்லை மல்லி சேர்க்க வேண்டும். இது முடிந்ததும் இதில் இறக்கி வைக்கும் போது எலுமிச்சை சாறினை சேர்க்க வேண்டும். அவ்ளோ தான்!!

யம்மியான “சிக்கன் சிந்தாமணி” ரெசிபி ரெடி!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here