நாவூறும் சுவையில் சிக்கன் மசாலா ரெசிபி – மிஸ் பண்ணாம செஞ்சு பாருங்க!!

0

சிக்கன் என்றாலே அசைவ பிரியர்களுக்கு ஒரு தனி விருந்து தான். அந்த வகையில் சிக்கனை வைத்து காரசாரமான ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

சிக்கன் – 1/2 கி

மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி

மஞ்சள்தூள் – 1 தேக்கரண்டி

பட்டை – சிறிது

கிராம்பு – சிறிதளவு

தக்காளி – 1

வெங்காயம் – 1

கரம் மசாலா தூள் – 1 தேக்கரண்டி

செய்முறை

முதலில் சிக்கனை மஞ்சள்தூள் சேர்த்து நன்கு கழுவி எடுத்துக்கொள்ளவும். அதன் பின் அதில் சிறிது மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இதனை அரை மணிநேரம் அப்படியே விட்டு விடவும்.

அதன் பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் பட்டை, கிராம்பு, வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும். இப்பொழுது எடுத்து வைத்த சிக்கனை அதில் சேர்த்து நன்கு கிளறி விடவும்.

தண்ணீர் ஊற்றாமல் சிறிது நேரம் வதக்கி கொண்டே இருக்கவும். சிக்கனில் உள்ள தண்ணீர் பிரிந்து வரும் வேளையில் அதனை மூடி வைக்கவும். அதன் பின் 5 நிமிடங்கள் கழித்து தண்ணீர் தேவையான அளவு ஊற்றி கிரேவி பதத்திற்கு வந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான சிக்கன் ரெசிபி தயார்.

                                        ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here