ஈஸியான, ஹெல்தியான “கிரில் சிக்கன்” ரெசிபி – வீட்டிலேயே எப்படி செய்றதுன்னு தெரிஞ்சிக்கலாம் வாங்க!!

0

சிக்கன் என்றாலே நமது உடலுக்கு கெடுதல் என்ற செய்தியினை தான் நாம் இதுவரை அறிந்திருப்போம், ஆனால் சிக்கன் உண்பதால் நமது எலும்புகள் வலுவடையும் மற்றும் நமது உடல் எடையினை குறைக்கவும் அது உதவும் என்று பலருக்கும் தெரியாது. சிக்கனை வைத்து “கிரில் சிக்கன்” செய்வது எப்படி என்று பார்க்கலாம்..!!

தேவையான பொருட்கள்

  • சிக்கன் – 500 கிராம்
  • தயிர் – 1/4 கப்
  • பூண்டு – 2 டீஸ்பூன்
  • இஞ்சி – 2 டீஸ்பூன்
  • கரம் மசாலா – 2 டீஸ்பூன்
  • மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
  • சீரக தூள் – 2 டீஸ்பூன்
  • மல்லி தூள் – 2 டீஸ்பூன்
  • பச்சை மிளகாய் – 5 அல்லது 6
  • மல்லித்தழை – 1/4 கப்
  • எண்ணெய் – 3 டீஸ்பூன்
  • எலுமிச்சை சாறு – 2 டீஸ்பூன்
  • உப்பு – 2 டீஸ்பூன்
  • பட்டர் – 1 டீஸ்பூன்

செய்முறை

முதலில், சிக்கனை நன்றாக கழுவி சுத்தமாக வைத்து கொள்ளவும். பின், ஒரு பாத்திரத்தில் தயிர், பூண்டு, இஞ்சி, கரம் மசாலா, மிளகாய் தூள், சீரக தூள், மல்லி தூள், மிளகாய் தூள், பச்சை மிளகாய், மல்லித்தழை, எலுமிச்சை சாறு, எண்ணெய் ஆகியவற்றை சேர்க்க வேண்டும். பின், இதனை மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும்.

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு ஒத்திவைப்பு?? தலைமை செயலாளர் ஆலோசனை!!

இந்த கலவையினை சிக்கனில் போட்டு நன்றாக பிசைந்து வைத்து கொள்ள வேண்டும். பின், அப்படியே 2 மணி நேரம் வைத்து விட வேண்டும். அடுப்பில் தவாவை வைத்து நன்கு காய்ந்ததும் அதில் சிறிது வெண்ணெய் சேர்த்து சிக்கன் துண்டுகளை அதில் சேர்க்கவும். சிக்கன் எப்பொழுதுமே வேகமாக வெந்துவிடும். அதனால் ஒரு 10 நிமிடங்கள் குறைந்த தீயில் வைத்து பிரட்டி போட்டுக்கொண்டே இருக்க வேண்டும். அதன் பிறகு இறக்கி பரிமாறினால் கிரில் சிக்கன் தயார்.

சுவையான “கிரில் சிக்கன்” ரெடி!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here