நாவூறும் சுவையுடன் “சிக்கன் கொத்சு” ரெசிபி – ட்ரை பண்ணி தான் பாருங்களேன்!!

0

அசைவ பிரியர்கள் விரும்பி சாப்பிடும் உணவான சிக்கன் வைத்து இன்று சற்று வித்தியாசமான ஆந்திர ஸ்டைல் “சிக்கன் கொத்சு” ரெசிபி குறித்து இந்த பதிவில் நாம் காணலாம்..!!

தேவையான பொருட்கள்

  • சிக்கன் – 500 கிராம்
  • இஞ்சி & பூண்டு விழுது – 3 டீஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு
  • மஞ்சள் தூள் – 2 டீஸ்பூன்
  • தயிர் – 3 டீஸ்பூன்
  • தக்காளி – 2
  • முந்திரி பருப்பு – 15
  • மல்லித்தழை – தேவையான அளவு
  • எண்ணெய் – 4 டீஸ்பூன்
  • வெங்காயம் – 2
  • மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
  • மல்லி தூள் – 2 டீஸ்பூன்
  • சீரக தூள் – 2 டீஸ்பூன்
  • தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை

முதலில், சிக்கனை நன்றாக சுத்தமாக கழுவி எடுத்து வைத்து கொள்ள வேண்டும். பின், ஒரு பாத்திரத்தில் மஞ்சள் தூள், உப்பு, இஞ்சி & பூண்டு விழுது (சிறிதளவு) சிக்கன் மற்றும் தயிர் ஆகியவற்றை சேர்த்து நன்றாக பிசைந்து வைக்க வேண்டும். இந்த கலவையினை அப்படியே 30 நிமிடங்கள் இருக்கும் படி பார்த்து கொள்ள வேண்டும்.

பெட்ரோல் & டீசல் விலை உயர்வை கண்டித்து “தளபதி” செஞ்ச காரியத்த பாருங்க – இணையத்தில் வைரல்!!

பின், மிஸ்ஸில் தக்காளி, முந்திரி பருப்பு மற்றும் மல்லித்தழை ஆகியவற்றை போட்டு அரைத்து வைத்து கொள்ள வேண்டும். பின், ஒரு சட்டியினை காய வைத்து அதில் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் சூடானதும், அதில் வெங்காயம் மற்றும் இஞ்சி மற்றும் பூண்டு விழுதினை சேர்க்க வேண்டும். வெங்காயம் பொன்னிறமாக வரும் வரை பார்த்து விட்டு அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், சீரக தூள், மல்லி தூள், ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

நன்றாக இந்த கலவை வதங்கியதும், அதில் நாம் எடுத்து வைத்துள்ள மசாலா கலவையினை சேர்க்க வேண்டும். கடைசியாக இதில் சிக்கனை சேர்க்க வேண்டும். தேவையான அளவிற்கு தண்ணீர் சேர்த்து மூடி வைத்து விட வேண்டும். 15 நிமிடங்கள் வரை குறைந்த அளவு தீயில் வைக்க வேண்டும். கடைசியாக கொத்தமல்லி சேர்த்து இறக்கி விட வேண்டும். அவ்ளோ தான்!!

சூடான “சிக்கன் கொத்சு” ரெடி!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here