மிகவும் வித்தியாசமான நாவூறும் உருளைக்கிழங்கு சிக்கன் குழம்பு… வீட்ல ட்ரை பண்ணி பாருங்க!!!

0

சிக்கன் என்றால் பிடிக்காதவர் எவரும் இலர். சிறுவர் முதல் பெரியவர் அனைவருக்கும் பிடித்த ஈஸியாக செரிமானம் ஆக கூடிய அதிக சுவைமிக்க ஒரு அசைவ உணவு சிக்கன். மேலும் இதில் வகை வகையாக பல உணவுகளை செய்யலாம். தற்போது நாம் இந்த பதிவில் உருளைக்கிழங்கு மற்றும் முருங்கைக்காய் சேர்த்த சிக்கன் குழம்பு எவ்வாறு செய்வது என்பதை இங்கே காணலாம்.

தேவையான பொருட்கள்

உருளைக்கிழங்கு – 4

முருங்கைக்காய் – 1

சிக்கன் – 1/2 கிலோ

வெங்காயம் – 1

தக்காளி – 1

இஞ்சி பூண்டு விழுது – 2 தேக்கரண்டி

பச்சை மிளகாய் – 4

மிளகாய் வற்றல்  – 2

பட்டை, கிராம்பு, லவங்கம் – தேவையான அளவு

சோம்பு – 1/4 தேக்கரண்டி

மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி

மிளகு தூள் – 1/4 தேக்கரண்டி

மல்லி தூள் – 1/2 தேக்கரண்டி

மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி

எண்ணெய் – தேவையான அளவு

உப்பு  – தேவையான அளவு

செய்முறை

முதலில் ஒரு கடாயை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி அதில் மிளகாய் வத்தல், பட்டை, கிராம்பு, லவங்கம், சோம்பு நன்றாக வதக்கி வெங்காயம் போட்டு வதக்கி அதனுடன் இஞ்சி பூண்டு விழுது, தக்காளி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும். பின்னர் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மிளகு தூள், மல்லி தூள் சேர்த்து நன்றாக கிளறி கொள்ளவும்.

மேலும் அதில் உருளைக்கிழங்கு மற்றும் முருங்கைக்காய் சேர்த்து வதக்கி தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு கிளறி கொண்டு, அதில் வெட்டி சுத்தம் செய்து வைத்துள்ள சிக்கனை சேர்த்து நன்றாக 3 விசில் வரும் வரை வேக விடவும். தற்போது சுவையான உருளைக்கிழங்கு சிக்கன் குழம்பு தயார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here