நாவூறும் சுவையுடன் “சிக்கன் லாலிபாப்” ரெசிபி – செஞ்சு அசத்துங்க!!

0

அனைவருக்குமே அசைவம் என்றால் பிடிக்கும். அதிலும், குறிப்பாக சிக்கன் என்றால் அனைவருக்குமே அலாதி பிரியம். அனைவருக்கும் பிடித்தமான “சிக்கன் லாலிபாப்” செய்வது எப்படி என்று இந்த பதிவில் காணலாம். அது மிகவும் சுலபமான ஒன்று தான்.

தேவையான பொருட்கள்

சிக்கனை ஊறவைத்தால்,
  • சிக்கன் – 6 (தனி தனியாக லாலிபாப் போல இருப்பதாக பார்த்துக்கொள்ளுங்கள்)
  • சோயா சாஸ் – 1 1/2 டீஸ்பூன்
  • மிளகாய் சாஸ் – 2 டீஸ்பூன்
  • தக்காளி கெட்ச்அப் – 2 டீஸ்பூன்
  • எலுமிச்சை சாறு – 2 டீஸ்பூன்
  • இஞ்சி & பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
  • உப்பு – 1 டீஸ்பூன்
  • மிளகு தூள் – 1 டீஸ்பூன்
  • முட்டை – 1
  • சோள மாவு – 1 டீஸ்பூன்
  • மைதா – 1 டீஸ்பூன்
சாஸ் செய்ய
  • எண்ணெய் – 2 டீஸ்பூன்
  • பூண்டு – 2 பல் (பொடியாக நறுக்கியது)
  • இஞ்சி – 2 (பொடியாக நறுக்கியது)
  • சிவப்பு மிளகாய் – 2 (பொடியாக நறுக்கியது)
  • சோயா சாஸ் – 1 டீஸ்பூன்
  • மிளகாய் சாஸ் – 2 டீஸ்பூன்
  • தக்காளி கெட்ச்அப் – 2 டீஸ்பூன்
  • தண்ணீர் – தேவையான அளவு
  • வெங்காய தால் – கார்னிஷ் செய்ய

செய்முறை

முதலில், ஒரு பாத்திரத்தில் சோயா சாஸ், மிளகாய் சாஸ், தக்காளி கெட்ச்அப், எலுமிச்சை சாறு, இஞ்சி பூண்டு விழுது, உப்பு, மிளகு தூள், முட்டை (நன்றாக அடித்து வைத்து கொள்ளவும்) சோள மாவு மற்றும் மைதா மாவு சேர்க்கவும். இந்த கலவையினை நன்றாக கலக்கவும். இதில் சிக்கனை போட்டு ஊறவைத்து விட வேண்டும்.

TNPSC தேர்வில் தமிழ் மொழியில் பயின்றவர்களுக்கு 20% இடஒதுக்கீடு – மதுரை கிளை நீதிமன்றம் அதிரடி!!

இந்த கலவை அப்படியே 1 மணி நேரம் இருக்குமாறு பார்த்து கொள்ளுங்கள். ஒரு மணி நேரம் நன்றாக ஊறியதும், அதனை எண்ணையில் பொரித்து எடுக்க வேண்டும். சிக்கன் பொன்னிறமாகும் வரை பொறிக்க வேண்டும். பின், ஒரு காடாயினை காய வைத்து அதில் எண்ணெய், பூண்டு, இஞ்சி, புதிய சிவப்பு மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதன் பிறகு அதில் சோயா சாஸ், மிளகாய் சாஸ் மற்றும் தக்காளி கெட்ச்அப் சேர்த்து நன்கு கலக்கவும்.பின்பு, கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும். கடைசியாக அதில் வறுத்த சிக்கன் போட்டு வதக்க வேண்டும். இறுதியாக, அதில் வெங்காய தாளை சேர்க்கவும். அவ்ளோ தான்!!

சூடான & சுவையான ‘சிக்கன் லாலிபாப்” ரெடி!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here