மணக்க மணக்க சிக்கன் கறி ரெசிபி – கிராமத்து விருந்து!!

0

சிக்கன் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே பிடித்தமான ஒன்று. குழம்பிலிருந்து சிக்கன் 65 வரை எது செய்தாலும் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இப்பொழுது இதுவரையிலும் இல்லாத புதிய விதமாக கிராமத்து பாணியில் சிக்கன் கிரேவி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

சிக்கன் – 1/2 கி

மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி

கரம் மசாலா – 1 தேக்கரண்டி

சீரகத்தூள் – 1 தேக்கரண்டி

பச்சை மிளகாய் – 4

பெரிய வெங்காயம் – 1

இஞ்சி, பூண்டு – சிறிது

கறிவேப்பிலை

எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

முதலில் சிக்கனை நன்கு கழுவி எடுத்துக்கொள்ளவும். அதன் பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் சீரகம் மற்றும் இடித்த மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும் அதன் பின் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

ஓரளவிற்கு வதங்கி வந்ததும் அதில் இஞ்சி மற்றும் பூண்டு சிறிதாக நறுக்கி சேர்க்கவும் . அதனுடன் சிறிது மஞ்சள்தூள் சேர்த்து சிக்கனை சேர்க்கவும். அதனுடன் சீரகத்தூள், கரம் மசாலா, மிளகாய்த்தூள் சேர்ந்து சிக்கனுடன் சேரும் படி வதக்கவும். இப்பொழுது தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சிக்கனை மூடி வைக்கவும்.

இப்பொழுது தண்ணீர் வற்றி எண்ணெய் பிடித்து மேலே வந்ததும் நறுக்கி வைத்துள்ள பச்சை மிளகாயை சேர்க்கவும். இப்பொழுது அடுப்பை மிதமாக வைத்து 3 நிமிடம் கிளறிக்கொண்டே இருக்கவும். கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான கிராமத்து சிக்கன் கறி ரெடி.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here