டேஸ்டியான “செட்டிநாட்டு மீன் குழம்பு” – வீக்எண்டு ஸ்பெஷல்!!

0

அசைவ பிரியர்களுக்கு மீன் என்றால் தனி இஷ்டம் தான். அந்த வகையில் இன்று செட்டிநாடு பாணியில் செய்யப்படும் “மீன் குழம்பு” எப்படி செய்வது என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்..!!

தேவையான பொருட்கள்

  • வாவல் மீன் – 500 கிராம்
  • வெங்காயம் – 5 முதல் 6
  • தக்காளி – 3
  • காய்ந்த மிளகாய் – 5
  • கடுகு – தேவையான அளவு
  • எண்ணெய் – தேவையான அளவு
  • உப்பு – தேவையான அளவு
  • மிளகு – 7
  • வெந்தயம் – தேவையான அளவு
  • மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
  • மல்லி தூள் – 2 டீஸ்பூன்
  • மஞ்சள் தூள் – 2 டீஸ்பூன்
  • சீரகம் – 2 டீஸ்பூன்
  • தேங்காய் துருவல் – 1/2 கப்
  • எலுமிச்சை சாறு – 2 டீஸ்பூன்
  • பூண்டு – 6
  • கருவேப்பில்லை – தேவையான அளவு

செய்முறை

முதலில், மீனை நன்றாக கழுவி எடுத்து கொள்ள வேண்டும். பின், அதில் எலுமிச்சை சாறு, மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்ந்து கிளறி விட வேண்டும். இதனை தனியாக எடுத்து வைத்து கொள்ள வேண்டும். பின், மசாலா தயாரிக்க, ஒரு சட்டியினை காய வைத்து அதில் வெங்காயம், தக்காளி, பூண்டு போட்டு நன்றாக வதக்க வேண்டும். இந்த கலவை நன்றாக வதங்கி வந்ததும் அதில் மிளகாய் தூள், மல்லி தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு, மிளகு, சீரகம், தேங்காய் துருவல், கருவேப்பில்லை ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.

இனியாவை பற்றி தவறாக பேசும் பக்கத்து வீட்டுக்காரர்கள் – அதிர்ச்சியில் பாக்கியலட்சுமி குடும்பம்!!

இது நன்றாக வதங்கியதும் இந்த கலவையினை மிக்ஸில் போட்டு மை போல அரைத்து கொள்ள வேண்டும். இந்த கலவையுடன் புளியும் சேர்த்து கொள்ள வேண்டும். இதனை தனியாக எடுத்து வைத்து கொள்ள வேண்டும். பின், ஒரு பாத்திரத்தினை எடுத்து அதில் கடுகு, வெந்தயம், கருவேப்பில்லை, காய்ந்த மிளகாய் மற்றும் இஞ்சி & பூண்டு (பொடியாக சீவியது) இதனை போட்டு நன்றாக வதக்க வேண்டும். பின், வெங்காயம் சேர்த்து அதனை வதக்க வேண்டும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த கலவை நன்றாக வதங்கியதும், அதில் நாம் எடுத்து வைத்துள்ள மசாலா கலவையினை சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். நன்றாக இது கொதித்ததும் இதில் எடுத்து வைத்துள்ள மீன் துண்டுகளை சேர்த்து கிண்ட வேண்டும். கடைசியில், கருவேப்பில்லை சேர்த்து இறக்கி வைத்து விட வேண்டும். அவ்ளோ தான்!!

டேஸ்டியான “செட்டிநாட்டு மீன் குழம்பு” தயார்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here