“செட்டிநாடு மீன் குழம்பை” இப்படி செஞ்சி பாருங்க.,,,,வீடே கம கமனு மணக்கும்!!

0
"செட்டிநாடு மீன் குழம்பை" இப்படி செஞ்சி பாருங்க.,,,,வீடே கம கமனு மணக்கும்!!

மீன் குழம்பு, நம்ம அப்பத்தா கை பக்குவத்தில் மண் சட்டில வச்சு சாப்பிட்டா, அதோட ருசியே தனிதான். அந்த வகையில் அசைவ பிரியர்களுக்கு பிடித்த “செட்டிநாடு மீன் குழம்பு” செய்வது எப்படி என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். மேலும் மீனில் புரோட்டீன், வைட்டமின், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, அயோடின், மெக்னீசியம் என பல சத்துக்கள் உள்ளன. இவ்வளவு சத்து நிறைந்த மீனை குழந்தைகளுக்கு சிறு வயதில் இருந்து கொடுத்து பழகி வந்தால் உடம்புக்கு மிகவும் நல்லது.

தேவையான பொருட்கள்:

 • மீன் – 1/2 கிலோ
 • எண்ணெய் -தேவையான அளவு
 • தக்காளி – 2 (நறுக்கியது)
 • பெரிய வெங்காயம் – 1/2 (நறுக்கியது)
 • வெந்தயம் – 1 டீஸ்பூன்
 • சின்ன வெங்காயம் – 15
 • புளி – 1 எலுமிச்சை அளவு
 • மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
 • உப்பு – தேவையான அளவு
 • துருவிய தேங்காய் – 1/4 கப்
 • சோம்பு – 1 டீஸ்பூன்
 • மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
 • மல்லி தூள் – 2 டீஸ்பூன்
 • பூண்டு – 5 பல்
 • கறிவேப்பிலை – சிறிது
 • கொத்தமல்லி- சிறிது

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

செய்முறை:

முதலில் மீனை மஞ்சள் தூள் போட்டு சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பின்னர் குழம்புக்கு தேவையான மசாலா அரைக்க வேண்டும். அதற்கு ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி தக்காளி (1), பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம் (7), சோம்பு, துருவிய தேங்காய்,பூண்டு ஆகியவற்றை வதக்கி ஆற வைத்து அரைத்து கொள்ள வேண்டும்.இப்போது ஒரு மண் சட்டி அல்லது வாணலியை எடுத்து அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெந்தயம், கறிவேப்பிலை போட்டு தாளிக்க வேண்டும்.

இதையடுத்து சின்ன வெங்காயம்(8), நறுக்கிய தக்காளி (1) ஆகியவற்றை போட்டு வதக்கிய பின்,அரைத்து வைத்துள்ள மசாலா, மிளகாய் தூள், மல்லி தூள், உப்பு சேர்த்து வதக்க வேண்டும். இந்த சமயம் எண்ணெய் பிரிந்து வரும். இப்போது புளி கரைசலை ஊற்ற வேண்டும். மேலும் தேவையான தண்ணீரை ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். ஒரு கொதி வந்ததும் சுத்தம் செய்து வைத்துள்ள மீனை போட்டு 10 நிமிடம் கொதிக்க வைத்தால் சூப்பரான “செட்டிநாடு மீன் குழம்பு” ரெடி. கொத்தமல்லி தூவி இறக்கினால் மீன் குழம்பு ஊரே மணக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here