செட்டிநாடு சிக்கன் கிரேவி.., எப்பவும் போல இல்லாமல் கொஞ்ச இப்படி சமைச்சு பாருங்க.., சுவை அள்ளும்!!!

0
செட்டிநாடு சிக்கன் கிரேவி.., எப்பவும் போல இல்லாமல் கொஞ்ச இப்படி சமைச்சு பாருங்க.., சுவை அள்ளும்!!!
செட்டிநாடு சிக்கன் கிரேவி.., எப்பவும் போல இல்லாமல் கொஞ்ச இப்படி சமைச்சு பாருங்க.., சுவை அள்ளும்!!!

அசைவ பிரியர்களின் பிடித்த உணவு வகையில் எப்பொழுது முதலில் இருப்பது சிக்கன் தான். இந்த சிக்கனை வைத்து எப்பவும் சமைப்பது போல் இல்லாமல் கொஞ்சம் வித்தியாசமான முறையில் செட்டிநாடு சிக்கன் ரெசிபி சமைப்பது எப்படி என்று பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்

  • சிக்கன் – 1/2 கிலோ
  • மல்லி – 3 டீஸ்பூன்
  • மிளகாய் வத்தல் – 4
  • சோம்பு – 1/2 டீஸ்பூன்
  • சீரகம் – 1 டீஸ்பூன்
  • தக்காளி – 1
  • சின்ன வெங்காயம் – 5
  • கொத்தமல்லி இலைகள் – சிறிதளவு
  • உப்பு – தேவையான அளவு
  • நல்லெண்ணெய் – 3 டீஸ்பூன்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

செய்முறை விளக்கம்

செட்டிநாடு சிக்கன் கிரேவி செய்வதற்கு 1/2 கிலோ சிக்கனை கழுவி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். பின் ஒரு கடாயில் மல்லி, மிளகு, மிளகாய் வத்தல், சீரகம், சோம்பு ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாக வறுத்து மிக்ஸி ஜாரில் போட்டு பேஸ்ட் பக்குவத்திற்கு அரைத்து கொள்ளவும். இப்பொழுது ஒரு குக்கரை அடுப்பில் வைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம், நறுக்கி வைத்துள்ள வெங்காயம், இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்றாக எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கி கொள்ளவும்.

கேஸ், ஃபைன், ஜெயில்.., எல்லாம் இருக்கு., வாரிசு பட  பாணியில் விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல்துறை!!

பின் நாம் கழுவி சுத்தம் செய்து வைத்துள்ள சிக்கனை சேர்த்து அத்துடன் அரைத்து வைத்துள்ள மசாலா பேஸ்டையும் சேர்த்து கிளறி விட்டு குக்கரை மூடி வைக்கவும். ஒரு 15 நிமிடங்களுக்கு பிறகு குக்கரை திறந்து சிறிதளவு கொத்தமல்லி இலைகளை கிள்ளி போட்டு அடுப்பை ஆப் செய்யவும். இப்பொழுது நமக்கு சுவையான செட்டிநாடு சிக்கன் கிரேவி தயார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here