செஸ் ஜாம்பவானை பின்னுக்கு தள்ளிய தமிழக வீரர்…, இந்தியாவின் நம்பர் 1. இடத்தை பிடித்து அசத்தல்!!

0
செஸ் ஜாம்பவானை பின்னுக்கு தள்ளிய தமிழக வீரர்..., இந்தியாவின் நம்பர் 1. இடத்தை பிடித்து அசத்தல்!!
செஸ் ஜாம்பவானை பின்னுக்கு தள்ளிய தமிழக வீரர்..., இந்தியாவின் நம்பர் 1. இடத்தை பிடித்து அசத்தல்!!

உலக செஸ் கூட்டமைப்பானது, சர்வதேச அளவில் சிறந்து விளங்கும் வீரர்களை அடிப்படையாக கொண்டு தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த தரவரிசையில், இந்தியாவின் குகேஷ் 2 இடங்கள் முன்னேறி 2756 புள்ளிகளுடன் 9 வது இடத்தை பிடித்துள்ளார். மேலும், இந்தியாவின் ஜாம்பவானான விஸ்வநாதனை பின்னுக்கு தள்ளி இந்தியாவின் நம்பர் 1 வீரராகவும் தமிழகத்தை சேர்ந்த குகேஷ் திகழ்கிறார். இந்த பட்டியலில் இந்தியாவின் விஸ்வநாதன் 2754 புள்ளிகளுடன் 10 வது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மேலும், இந்த பட்டியலில் இந்தியாவின் மற்ற வீரர்களான விதித் சந்தோஷ் (2719 புள்ளிகள்) 24 வது இடத்திலும், பெண்டலா ஹரிகிருஷ்ணா (2711 புள்ளிகள்) 28, பிரக்ஞானந்தா ரமேஷ்பாபு (2710 புள்ளிகள்) 29, அர்ஜுன் எரிகைசி (2701 புள்ளிகள்) 37 வது இடத்திலும் உள்ளனர். இந்த உலக செஸ் தரவரிசையில், நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன் முதல் இடத்தை தொடர்ந்து தக்க வைத்துள்ளார்.

அறிமுக ஆட்டத்தில் அசத்திய திலக் வர்மா…, இன்ப அதிர்ச்சி கொடுத்த பிசிசிஐ!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here