செஸ் அப்டேட்.., முக்கிய வீரர்களை வீழ்த்தி இந்திய வீரர் முதலிடம்.., பட்டத்தை வெல்வாரா??

0

இந்திய வீரர் பிரக்ஞானந்தா, இன்று நடைபெற்ற போட்டியில் முக்கிய வீரர்களை வீழ்த்தி முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.

பிரக்ஞானந்தா

ஜூலியஸ் பேர் கோப்பை செஸ் போட்டியில் உலகின் NO 1 செஸ் வீரர்களான மேக்னஸ் கார்ல்சன், பிரக்ஞானந்தா, அர்ஜுன் எரிகைசி உட்பட 16 வீரர்கள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர். இந்த செஸ் போட்டி ஆன்லைன் வழியாக நடைபெற்று வருகிறது. இந்த 16 வீரர்களும் தலா 15 போட்டிகளில் விளையாட வேண்டும்.

அதன் படி முதல் நாள் நடைபெற்ற போட்டியில் இந்தியாவின் பிரக்ஞானந்தா மூன்று போட்டிகளில் விளையாடினார். அந்த மூன்று போட்டியிலும் பிரபல வீரர்களான இவான்சுக், டுடா, ஜெல் ஃபண்ட் ஆகிய வீரர்களை வீழ்த்தி அசத்தினார். இந்த மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றதன் மூலம் பிரக்ஞானந்தா முதலிடத்தில் உள்ளார்.

அதே போன்று கார்ல்சன் 10 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், இவான்சுக், ஹான்ஸ் நீமன், அர்ஜுன் எரிகைசி ஆகியோர் 9 புள்ளிகளுடன் 2-ம் இடத்தில் உள்ளனர். இதில் இந்திய வீரர் பிரக்ஞானந்தா இனி வரும் 12 போட்டிகளில் வெற்றி பெற்று ஜூலியஸ் பேர் கோப்பையை வெல்வாரா என பார்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here