2021 யில் ஆதிக்கம் செலுத்திய தமிழ் நடிகர்கள் – சூப்பர் ஸ்டாரை பின்னுக்கு தள்ளி நடிகர் விஜய் முதலிடம்!!

0

2021 ஆம் ஆண்டு முடிய இருக்கும் நேரத்தில் சென்னையின் முன்னணி திரை அரங்கம் ஒன்று இந்த ஆண்டின் ஆதிக்கம் செய்த படங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் நடிகர் விஜய்யின் மாஸ்டர் படம் முதல் இடத்தில் உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

டாப் தமிழ் நடிகர்கள்:

பொதுவாகவே ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் அனைத்து ஊடகங்களும் இந்த ஆண்டின் சினிமா துறையில் ஆதிக்கம் செலுத்திய நடிகர்கள் மற்றும் திரைப்படங்களின் பட்டியலை வெளியிடும். இந்த வகையில் முதலில் ட்விட்டர் நிறுவனம் தனது புள்ளி விபரங்களை வெளியிட்டது. இந்த பட்டியல் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் சென்னையின் முன்னணி திரையரங்குகளில் ஒன்றான வெற்றி திரையரங்கம் தற்போது ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளது.

அந்த பட்டியலில் இந்த ஆண்டின் ஆதிக்கம் செலுத்திய நடிகர்கள் மற்றும் திரைப்படங்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அதிகமாக விற்கப்பட்ட டிக்கெட்டுகளின் அடிப்படையில் இந்த பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. அந்த வரிசையில் நடிகர் விஜய்யின் மாஸ்டர் படம் முதல் இடத்தில் உள்ளது. அடுத்ததாக, சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படம் இரண்டாம் இடத்திலும், சிம்புவின் மாநாடு மூன்றாம் இடத்தில் உள்ளது. அதே போல நான்கு மற்றும் ஐந்தாம் இடங்களை கர்ணன் மற்றும் அண்ணாத்தே படங்கள் பெற்றுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here