சென்னையில் நாளை இரவு முதல் பொதுப் போக்குவரத்துக்கு தடை – மாநகர காவல் ஆணையர் அறிவிப்பு!!

0
மாநிலத்தில் வருகிற மார்ச் 17ம் தேதி இரவு நேர ஊரடங்கு?? அரசு பரபரப்பு விளக்கம்!!
மாநிலத்தில் வருகிற மார்ச் 17ம் தேதி இரவு நேர ஊரடங்கு?? அரசு பரபரப்பு விளக்கம்!!

மாநிலத்தின் தலைநகரான சென்னையில் நாளை இரவு 12 மணி முதல் அத்தியாவசிய பயணம் தவிர பிற பயணங்களுக்கு தடை விதிக்கப்படுவதாக சென்னை மாநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

பொது போக்குவரத்துக்கு தடை :

தமிழகத்தில் கொரோனாவின் உருமாறிய ஓமைக்ரான் வைரஸ் மிக தீவிரமாக பரவி வருகிறது. இதனால், கடற்கரை மற்றும் ரிசார்ட்டுகளில் புத்தாண்டு கொண்டாட அனுமதி மறுக்கப்படுவதாக டிஜிபி சைலேந்திரபாபு அண்மையில் உத்தரவிட்டார். இந்த நிலையில், சென்னை மாநகர காவல் ஆணையர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது, நாளை(31.12.2021) நள்ளிரவு 12 மணி முதல், ஜனவரி 1ம் தேதி அதிகாலை 5 மணி வரை பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.

மேலும், அத்தியாவசிய பணிக்கு செல்லும் வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும், மற்ற பொது மக்கள் அனைவரும், நாளை இரவு 12 மணிக்கு முன்பாக தங்கள் பயணத்தை முடித்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு சென்னை வாசிகளை கலக்கமடைய செய்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here