சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் கவனத்திற்கு.,, செமஸ்டர் தேர்வு தேதி மாற்றம்!!

0
சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் கவனத்திற்கு.,, செமஸ்டர் தேர்வு தேதி மாற்றம்!!
சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் கவனத்திற்கு.,, செமஸ்டர் தேர்வு தேதி மாற்றம்!!

TNPSC குரூப் 1 தேர்வு காரணமாக, சென்னை பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் நடைபெற்று வரும் செமஸ்டர் தேர்வு, வேறு தேதிக்கு மாற்றப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தேர்வு தேதி மாற்றம்:

TNPSC ,குரூப் 1 பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை கடந்த ஜூலை மாதம் வெளியிட்டனர். இந்த அறிவிப்பின் அடிப்படையில் துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர் , வணிகவரித்துறை உதவி ஆணையர் , கூட்டுறவு துணைப் பதிவாளர் , ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குநர், மாவட்டத் தீயணைப்பு அதிகாரி உள்ளிட்ட 92 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மேலும் கடந்த ஆகஸ்ட் 29 ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் குரூப் 1 முதற்கட்டத் தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதையடுத்து குரூப் 1 முதற்கட்டத் தேர்வு நாளை (19.11.22) நடைபெற உள்ளது. மேலும் கடந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கூடுதலாக விடப்பட்ட விடுமுறையை ஈடு செய்யும் விதமாக நாளை பள்ளி , கல்லூரிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் குரூப் 1 முதல்நிலை போட்டி தேர்வுக்காக பள்ளிகள், கல்லூரிகள் தேர்வு மையங்களாக ஒதுக்கப்பட்டு உள்ள நிலையில் தேர்வு ரத்து செய்யப்படுமா? என்ற சந்தேகம் தேர்வர்கள் மத்தியில் எழுந்தது. இருப்பினும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், குரூப் 1 தேர்வு திட்டமிட்டபடி நாளை நடைபெறும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அர்ச்சனா குழந்தையை மாற்றியதை கண்டுபிடிக்கும் ஜெஸ்ஸி.., அம்பலமான பித்தலாட்டம்!!

மேலும் குரூப் 1,தேர்வை முன்னிட்டு, நாளை நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் வேறு தேதிக்கு மாற்றம் செய்யப்படுவதாக சென்னை பல்கலைக்கழகம் தகவல் தெரிவித்துள்ளது. அதாவது சென்னை பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட அரசு கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் அனைத்து தனியார் கலை அறிவியல் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு தொடங்கி நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here