பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.., சென்னை பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பு!!

0
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.., சென்னை பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பு!!

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் உயர்கல்வி பயில உதவித்தொகை உள்ளிட்ட பல சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2010-11 ம் கல்வியாண்டு முதல் சென்னை பல்கலைக்கழகம் இலவச கல்வி திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இத்திட்டத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள் அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி கல்லூரிகளில் இலவசமாக இளங்கலை கல்வி பயிலலாம். ஆனால் இவர்களுக்கு சில குறிப்பிட்ட தகுதிகளை நிர்வாகம் நிர்ணயித்துள்ளது. அதன்படி “மாணவர்களின் குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

கொரோனாவுக்கு பயந்து மூன்று வருடம் வீட்டிலேயே சிறை – கன்னியாகுமரியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

அதேபோல் குடும்பத்தில் முதல் பட்டதாரி, தந்தையை இழந்தவர்கள் மற்றும் திருநங்கைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் கல்வியாண்டுக்கான விண்ணப்பம் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளிவந்த 15 நாட்களுக்குள் https://www.unom.ac.in/என்ற இணையத்தளத்தில் வெளியிடப்படும் என தகவல் வெளிவந்துள்ளது. எனவே தகுதியான மாணவர்கள் தயாராக இருக்க நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here