தமிழகத்தில் 8 ரயில் நிலையங்களில் பிளாட்பார்ம் டிக்கெட் விலை உயர்வு.,, தெற்கு ரயில்வே அறிவிப்பு!!

0
தமிழகத்தில் 8 ரயில் நிலையங்களில் பிளாட்பார்ம் டிக்கெட் விலை உயர்வு.,, தெற்கு ரயில்வே அறிவிப்பு!!

விழாகாலம் தொடங்கி விட்டதால், பொதுமக்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த ரயில் பிளாட்பார்ம் டிக்கெட் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உயர்வு பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டிக்கெட் விலை உயர்வு:

தமிழகத்தில் அக்டோபர் மாதம் முதல் தொடர்ச்சியாக பல்வேறு திருவிழாக்கள், பண்டிகைகள் கொண்டாடப்பட உள்ளது. அதாவது இந்த மாதத்திலேயே ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, தீபாவளி வர உள்ளது. இந்த தொடர் பண்டிகைகளை முன்னிட்டு வெளியூரில் தங்கி உள்ளவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்வார்கள். இதனால் பேருந்து நிலையம், ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதும்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதனால் கூட்டத்தை கட்டுப்படுத்த ரயில்வே நிர்வாகம் வருடம்தோறும் நடவடிக்கைகள் எடுத்து வரும். அந்த வகையில், தற்போது தெற்கு ரயில்வேயின் சென்னை மண்டலம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பேரில், பொதுமக்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த நடைமேடை( பிளாட்பார்ம்)கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு சென்னை கோட்டத்தில் உள்ள 8 முக்கிய ரயில் நிலையங்களில் அமலுக்கு வர உள்ளது.

ஆண்ட்ராய்டு பயனர்களே உஷார்.., உங்களை குறி வைக்கும் “சோவா வைரஸ்”.,வங்கிகள் எச்சரிக்கை!!

அதாவது, சென்னை சென்ட்ரல், தாம்பரம், எழும்பூர், செங்கல்பட்டு, காட்பாடி, அரக்கோணம், ஆவடி, திருவள்ளூர் ஆகிய 8 ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டணமானது ரூ.10ல் இருந்து ரூ.20 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த கட்டண உயர்வு, அக்டோபர் 1 முதல் ஜனவரி 31, 2023 வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here