சென்னை டூ பெங்களூரு….,இனி இரண்டே மணி நேரத்தில்….,

0
சென்னை டூ பெங்களூரு....,இனி இரண்டே மணி நேரத்தில்....,
சென்னை டூ பெங்களூரு....,இனி இரண்டே மணி நேரத்தில்....,

நாடு முழுவதும் உள்ள மக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் ஒரு பொதுப் போக்குவரத்து ரயில் சேவை. இந்த சேவைகள் குறைந்த செலவில் வழங்கப்படுவதால் பலரும் ரயில் போக்குவரத்தை விரும்புகின்றனர். அந்த வகையில், மக்களின் பயண நேரத்தை குறைக்கும் விதமாக வந்தே மாதரம், மெட்ரோ போன்ற அதிவேக ரயில் போக்குவரத்தினை மத்திய ரயில்வே நிர்வாகம் செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், சென்னை முதல் பெங்களூருக்கு இடையே புதிய அதிவேக ரயில் சேவைகளை துவங்குவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்திருந்தது. இதற்கான, இறுதி வழித்தடத்தை ஆய்வு செய்யும் பணிகளில் ரயில்வே நிர்வாகம் ஈடுபட இருப்பதாகவும், இதற்கான டெண்டர் விடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்னடா நடக்குது இங்க….,’ஆதிபுருஷ்’ வெளியாகும் அரங்குகளில் அனுமனுக்கு காலி இடம்…..,

இந்த சேவைகள் செயல்படுத்தப்பட்டால், சென்னையில் இருந்து பெங்களூரு செல்லும் பயண நேரம் 2 மணி நேரமாக குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, பெங்களூருவிற்கு செல்லும் அதிவேக ரயில்கள் 220 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட இருக்கிறது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here