சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் போக்குவரத்து இடையூறுகளை தவிர்க்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் மாடுகள் சாலையோரங்களில் சுற்றி திரிகிறது. இதனால் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படுவதோடு பல விபத்துகளும் அரங்கேறி வருகிறது. இதையடுத்து சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற கமிஷனர் ஜெ.ராதாகிருஷ்ணன் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
அதாவது “நகர்ப்புறங்களில் மாடுகளை வளர்க்க விரும்புபவர்கள் வீட்டிற்குள்ளேயே வளர்க்க வேண்டும். அல்லது சென்னையை விட்டு வெளியே கொண்டு செல்ல வேண்டும். இனி சாலையில் மாடுகள் சுற்றி திரிந்தால், அதனை கால்நடை வளர்ப்பு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். உரிமையாளர்களுக்கு திருப்பி தரப்பட மாட்டாது.” என பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.
அடுத்த 3 மணி நேரத்தில் தூள் கிளப்ப போகுது மழை.., இந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!!!