ஆடி தள்ளுபடி வந்தாச்சு – சென்னை தியாகராயநகரில் பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது..!

0

ஆடி மாதம் தொடங்கியதை அடுத்து சென்னை தியாகராயநகரில் தள்ளுபடி விலையில் பொருட்கள் வாங்க மக்கள் குவிந்ததால் ரங்கநாதன் தெருவில் மக்கள் கூட்டம் காணப்பட்டது.

தியாகராயநகரில் தள்ளுபடி விலையில் பொருட்கள்..!

ஆடி மாதம் என்றாலே முதலில் நியாபகத்துக்கு வருவது ஆடி தள்ளுபடி தான் ஆடி மாதத்தில் ஜவுளி பொருட்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை தள்ளுபடி விலையில் வாங்கலாம் என்பதால் கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுவது வழக்கம்.

இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்தாலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து அனைத்து கடைகளும் திறந்திருக்கின்றன. நேற்று ஆடி மாதம் பிறந்ததையொட்டி சென்னையில் தியாகராய நகர், பெரம்பூர், வண்ணாரப்பேட்டை, புரசைவாக்கம், மயிலாப்பூர் உள்பட இடங்களில் உள்ள ஜவுளி கடைகளில் ஆடித்தள்ளுபடி அறிவிக்கப்பட்டது.

பப்புவா நியூ கினியா தீவில் கடுமையான நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை..!

இதனால் சென்னையின் தியாகராயநகரில் நேற்று தள்ளுபடி விலையில் பொருட்களை வாங்க மக்கள் குவிந்தனர். ரங்கநாதன் தெருவிலும் மக்கள் கூட்டம் காணப்பட்டது. துணிமணிகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை மக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர். ஆடி மாதம் தள்ளுபடி மாதமாக களைகட்டத் தொடங்கி இருப்பதால் இன்னும் நாட்கள் செல்ல செல்ல மக்கள் கூட்டம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here