சென்னை ஓபன் டென்னிஸ்.., காலிறுதியில் கால் பதித்த மக்டா லினெட்!! இந்திய வீராங்கனைகள் அதிர்ச்சி தோல்வி!!

0
சென்னை ஓபன் டென்னிஸ்.., காலிறுதியில் கால் பதித்த மக்டா லினெட்!! இந்திய வீராங்கனைகள் அதிர்ச்சி தோல்வி!!

சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் போலந்தின் மக்டா லினெட் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

இந்திய ஜோடி வெளியேற்றம்!!

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ் டி ஏடி மைதானத்தில் ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஒற்றையர் பிரிவில் நேற்று 2-வது சுற்று ஆட்டங்கள் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் போலந்தின் மக்டா லினெட்,ரஷ்யாவின் ஒஸானா செலக்மேதேவாவை எதிர்கொண்டார். இதில் சிறப்பாக விளையாடிய மக்டா லினெட் 6-2, 6-0 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதே போல் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் ஜெர்மனியின் தாட்ஜனா மரியா, அர்ஜென்டினாவின் நடியா போடோரோஸ்காவை எதிர்த்து விளையாடினார். இந்த இருவருக்கு இடையிலான 3-6, 6-2, 7-6 (8-6) என்ற செட் நடியா போடோரோஸ்கா வெற்றி பெற்று கால் இறுதி ஆட்டத்திற்கு தகுதி பெற்றார். இதனை தொடர்ந்து இரட்டையர் பிரிவு சுற்றுக்கான காலிறுதி ஆட்டம் நடைபெற்றது.

இதில் இந்தியாவின் இளம் ஜோடியான கர்மன் தண்டி- ருதுஜா போசேல் இணை, கேப்ரியல்லா டாப்ரோஸ்கி மற்றும் லுசா ஸ்டெபானி ஜோடியுடன் மோதியது. இந்த போட்டியின் தொடக்கத்தில் இருந்து இந்திய அணி மோசமான ஆட்டத்தை மட்டுமே வெளிப்படுத்தியது. இதனால் 0-6, 3-6 என்ற நேர் செட் கணக்கில் கேப்ரியல்லா டாப்ரோஸ்கி, லுசா ஸ்டெபானி ஜோடி வெற்றி பெற்று அசத்தியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here