சென்னை ஓபன் டென்னிஸ்.., எதிரணியை சமாளிக்கமுடியாமல் ஆட்டமிழந்த இந்திய வீராங்கனை!!

0
சென்னை ஓபன் டென்னிஸ்.., எதிரணியை சமாளிக்கமுடியாமல் ஆட்டமிழந்த இந்திய வீராங்கனை!!
சென்னை ஓபன் டென்னிஸ்.., எதிரணியை சமாளிக்கமுடியாமல் ஆட்டமிழந்த இந்திய வீராங்கனை!!

சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியில் அலிசன் ரிஸ்கே மற்றும் அங்கிதா ரெய்னா போன்றோர், எதிர் அணியை சமாளிக்க முடியாமல் ஆட்டமிழந்தனர்.

சென்னை ஓபன் டென்னிஸ்!!

சர்வதேச பெண்கள் ஓபன் டென்னிஸ் போட்டி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் 2-வது நாளான நேற்று ஒற்றையர் பிரிவிற்கான முதல் சுற்று போட்டிகள் நடைபெற்றது. இந்த முதல் சுற்று ஆட்டத்தில் சர்வதேச தரவரிசை பட்டியலில் 333 வது இடத்தில் உள்ள இந்திய வீராங்கனை அங்கிதா ரெய்னா, 85 வது இடத்தில் உள்ள தட்ஜனா மரியாவுடன் பலப்பரீட்சை நடத்தினார்.

இப்போட்டியின் தொடக்கத்தில் இருந்தே தத்ஜனா மரியாவின் சர்வீஸ்களை எதிர்கொள்ள முடியாமல் திணறிய அங்கிதா ரெய்னா, 0-6, 1-6 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்தார். இந்த முதல் சுற்று ஆட்டத்தில் வெற்றி பெற்றதன் மூலம் ஜெர்மனி வீராங்கனை தட்ஜனா 2வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில், அமெரிக்காவின் அலிசன் ரிஸ்கே, ரஷ்யாவின் அனஸ்டாசியா கசனோவாவை எதிர்கொண்டார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்த இருவருக்கும் இடையில் ஆட்டம் விறுவிறுப்பாக அரங்கேற இறுதியில் 6-2, 6-3 என்ற நேர் செட் கணக்கில் ரஷ்யா வீராங்கனையை வீழ்த்தி அனஸ்டாசியா கசனோவா வெற்றி பெற்றார். மேலும் இந்த டென்னிஸ் தொடருக்கான ஒற்றையா் பிரிவில் தற்போது இந்தியா தரப்பில் கா்மன் கௌா் தண்டி மட்டும் களத்தில் இருக்கிறார். அவரும் தனது 2-வது சுற்றில் கனடாவின் யுஜின் புச்சாா்டின் சவாலை வருகிற புதன்கிழமை எதிர்கொள்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here