சென்னையில் மெட்ரோ ரயில் பயனாளர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு 3 வழித்தடங்களில் நடைபெற்று வரும் 2ஆம் கட்ட மெட்ரோ ரயில் கட்டுமான பணிகள் மும்முரம் ஆக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் 2028 ஆம் ஆண்டுக்குள் முடிக்கவும் திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில் கோயம்பேடு to ஆவடி, சிறுசேரி to கிளாம்பாக்கம், பூந்தமல்லி to பரந்தூர் ஆகிய பகுதிகளையும் மெட்ரோ ரயில் சேவையுடன் இணைக்க மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இது தொடர்பான சாத்தியக்கூறுகளை ஆராயும் பணி 2 வாரத்திற்குள் முடிக்கப்பட்டு, தமிழ்நாடு அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யப்படும். இதனை தொடர்ந்து விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்படும் என தகவல் தெரிவித்துள்ளனர்.
அரசு ஊழியர்களே., ஜூலை மாத அகவிலைப்படி உயர்வு? வெளியான மாஸ் அப்டேட்!!!