சென்னையில் மே மாத ஞாயிற்று கிழமைகளிலும் மெட்ரோ – ரயில்வே துறை அறிவிப்பு!!

0

தமிழகத்தில் தற்போது கொரோனா நோய்பரவல் மிக தீவிரமாக இருந்து வரும் நிலையில் தற்போது சென்னையில் இயக்கப்படும் மெட்ரோ ரயில் ஞாயிற்று கிழமைகளிலும் குறிப்பிட்ட நேரத்தில் இயக்கப்படும் என்றும் அதற்கான நேர அளவு குறித்த தகவலையும் அறிவித்துள்ளது.

மெட்ரோ ரயில்:

தமிழகத்தில் கடந்த ஆண்டு முதல் கொரோனா நோய்பரவல் மக்களை மிக கடுமையாக பாதித்து வருகிறது. இதனால் தமிழகத்தில் பல்வேறு துறைகள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டது. அதில் ஒன்று தான் போக்குவரத்துத்துறை. ரயில் மற்றும் பேருந்து சேவை மிக கடுமையாக பாதிக்கப்பட்டது. பின்பு நாளடைவில் கட்டுப்பாடுகளுடன் போக்குவரத்து சேவை இயக்கப்பட்டு வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தமிழகத்தில் நாளை வாக்கு எண்ணிக்கை – நடைபெறும் விவரம்!!

அதேபோல் மெட்ரோ ரயில் சேவையும் பல கட்டுப்பாடுகளுடன் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் தற்போது கொரோனாவின் இரண்டாவது அலையின் தாக்கம் மிக அதிகமான அளவில் இருந்து வருகிறது. இதனால் தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 20ம் தேதி பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அதன்படி மே மாத அனைத்து ஞாயிற்று கிழமைகளிலும் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை குறிப்பிட்ட நேரத்தில் மெட்ரோ இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெட்ரோ ரயில் நேர விவரம்:

  • விம்கோ நகர் முதல் விமானநிலையம் மெட்ரோ வரை (நீலவழித்தடம்)- 1 மணி நேர இடைவெளி.
  • சென்ட்ரல் மெட்ரோ முதல் விமான நிலையம் வரை- 2 மணி நேர இடைவெளி.
  • சென்ட்ரல் மெட்ரோ முதல் பரங்கிமலை மெட்ரோ வரை – 2 மணி நேர இடைவெளி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here